பார்க்கில் நண்பருடன் இருந்த 17 வயது சிறுமி.. போலீஸ் என அழைத்து பலாத்காரம் செய்த 3 பேர் கும்பல்
டெல்லி: தலைநகர் டெல்லியில் இரவில் பார்க்கில் ஆண் நண்பருடன், 17 வயது சிறுமி பேசி கொண்டிருந்தார். அப்போது 3 பேர் கும்பல் போலீஸ்காரர்கள் என்று கூறி துப்பாக்கி, கத்தியை காட்டி மிரட்டி 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த அதிர வைத்துள்ளது.
டெல்லியில் வசித்து வரும் 17 வயது சிறுமி நேற்று மாலையில் தனது நண்பருடன் கல்காஜி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர்கள் 2 பேரும் அஸ்தா குஞ்ச் பார்க்கிற்கு சென்றனர். இரவு 8.45 மணிக்கு அவர்கள் 2 பேரும் பார்க்கில் இருந்தனர்.

இந்த சமயத்தில் திடீரென்று 3 பேர் அவர்கள் அருகே வந்தனர். அப்போது அவர்கள் தங்களை போலீஸ்காரர்கள் என்று அறிமுகம் செய்து கொண்டனர். அதுமட்டுமின்றி இரவு நேரத்தில் இருவரும் என்ன செய்கிறீர்கள்? என்று கேள்வி கேட்டனர்.
அதற்கு இளம்பெண்ணும், அவரது நண்பரும், ''இருவரும் கல்காஜி கோவிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு பார்க்கில் இருக்கிறோம்'' என்றனர். ஆனால் அவர்கள் நம்பவில்லை. இருவரும் 18 வயது நிரம்பாதவர்களாக உள்ளனர். இருவரும் ஏதோ தவறு செய்கிறீர்கள். இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய போகிறோம் என்று கூறி மிரட்டினர்.
இதையடுத்து சிறுமியை தனியாக ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்து சென்ற 3 பேரும் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தனர். அதன்பிறகு அவர்கள் சம்பவம் பற்றி வெளியில் கூறினால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கூறி சிறுமி அவரது நண்பரை மிரட்டி சென்றனர்.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி சார்பில் அமர் காலனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் போலீஸ்காரர்கள் என்று கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பெயர்கள் ஆசிப், ஹேமந்த் மற்றும் முகேஷ் என்பது தெரியவந்தது.
இதில் ஆசிப் டெல்லி அமர் காலனியில் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் அருகே சுற்றி திரிவதாக போலீசாருக்கு தெரியவந்தது. அவரை பிடிக்க போலீசார் சென்றனர். அப்போது ஆசிப் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து 3 முறை சுட்டார். இதில் ஒரு குண்டு ராஜேஷ் அணிந்திருந்த குண்டு துளைக்காத ஆடையில் பட்டது. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.
இதையடுத்து போலீஸ்காரர் ராஜேஷ் தற்காப்புக்காக சுட்டார். இதில் ஆசிப்பின் காலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் சுருண்டு விழுந்தார். அவரை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த ஹேமந்த் மற்றும் முகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications
