டெல்லி திமுக அலுவலகம் திறப்பு: Karunanithi A Life புத்தகம் வெளியீடு.. பெற்றுக் கொண்ட சோனியா
டெல்லி: டெல்லியில் கட்டப்பட்டுள்ள அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும் தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து ‛Karunanithi A Life' எனும் புத்தகத்தை இந்து என் ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்று கொண்டார்.
நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் 7 எம்பிக்கள் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கைக்கு நிலம் வழங்கப்பட்டு வருகிறது.

2013ஆம் ஆண்டில் திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. பின்னர், இங்கு திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின.
இந்த பணி முழுவதுமாக முடிவடைந்துள்ளன. பிரமாண்டமாக அண்ணா-கலைஞர் அறிவாலயம் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. தமிழக முதல்வர் முகஸ்டாலின் அலுவலகத்தை திறந்து கட்சியை கொடியை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதையடுத்து ஏஎஸ் பன்னீர் செல்வம் எழுதிய ‛Karunanithi A Life ' எனும் புத்தகத்தை இந்து என் ராம் வெளியிட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பெற்று கொண்டார்.












Click it and Unblock the Notifications