ஒரே நாளில் 49,310 பேருக்கு பாதிப்பு.. இந்தியாவில் கொரோனா நினைத்து பார்க்க முடியாத வேகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று மின்னல் வேகத்தில பரவி வருகிறது. கடந்த இரு நாட்களாக 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் உயரிழப்பு எண்ணிகை பிரேசில் அமெரிக்கா நாடுகளை போல் உச்சமாகி வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள்.

In India, 48,446 people were affected by corona in yesterday

இந்தியாவில இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 49,310 பேர் பாதிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,87,945 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 4,40,135 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

நேற்று இந்தியாவில் கொரோனா பாதிப்பில் இருந்து 33,326 பேர் குணம் அடைந்ததால், இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8,17,209 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இந்தியாவில் ஒரே நாளில் 740 பேர் மரணம் அடைந்தனர். இதனால் இதுவரை கொரோனாவால் இந்தியாவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 30,601 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக நேற்று மகாராஷ்டிராவில் 9,895 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அங்கு மொத்த பாதிப்பு 347,502 ஆக உயர்ந்துள்ளது. குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையும் ஒரே நாளில் 6484 அதிகரித்துள்ளது. இது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவில் இருந்து 194253 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 12854 பேர் உயிரிழந்துள்ளனர்.

2வது இடத்தில் தமிழகம் உள்ளது. இங்கு நேற்றுஒரே நாளில் 6472 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மொத்த பாதிப்பு 192964 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் தமிழகத்தில் 5210பேர் குணம் அடைந்தனர். இதனால் மொத்த குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 136793 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புடன் 52939 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 3232 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+