போட்டோ எடுக்க கூப்பிட்டு எங்கெல்லாம் கை வைத்தார் பாஜக எம்.பி. ப்ரிஜ் பூஷன்? எப்.ஐ.ஆரில் அம்பலம்
டெல்லி: ரெஸ்டாரண்ட், போட்டி இடம், அலுவலகம் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரிஜ் பூஷன் பாலியல் தொல்லை கொடுத்தாக முதல் தகவல் அறிக்கையில் வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண். பாஜக எம்.பியுமான இவர் மீது கடந்த ஜனவரி மாதம் மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் சுமத்தியிருந்தனர்.
அப்போது விசாரணைக் குழு ஒன்று மட்டும் அமைக்கப்பட்டது. இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து மல்யுத்த வீராங்கனைகள் கடந்த மாதம் இறுதியில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். மைனர் வீராங்கனை உள்ளிட்டோர் புகார் அளித்த போதிலும், அவர் மீது முதலில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. இதற்காக வீரர், வீராங்கனைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே பின்னரே, போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனினும் அதன் பின்னர் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை எனக் கூறப்படுகிறது. பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர். குறிப்பாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழாவின் போது அவர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இருப்பினும், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாதததைக் கண்டித்து வீரர், வீராங்கனைகள் கங்கை நதியில் பதக்கங்களை எறிய போவதாக அறிவித்தனர். எனினும் விவசாய சங்க தலைவர்கள் கேட்டுக் கொண்ட பிறகு ஐந்து நட்கள் கெடு விதித்து இருக்கின்றனர். மல்யுத்த வீராங்கனைகள் சுமத்தும் குற்றச்சாட்டை மறுத்து பேசும் பிரிஜ் பூஷன் சரண் சிங் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்கவும் தயார் என்று கூறி வருகிறார்.
இதனிடையே, பிரிஜ் பூரண் சிங்கிற்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையின் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி டெல்லி போலீசார் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். ஐபிசி பிரிவு 354, 354 ஏ( பாலியல் துன்புறுத்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முதல் தகவல் அறிக்கையில் மல்யுத்த வீராங்கனைகள் அளித்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யபட்ட விவரங்களை பிரபல ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் பல திடுக்கிட வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதாவது, மல்யுத்த வீரானங்கைகளின் மார்பு மற்றும் தொப்புள் உள்ளிட்டவற்றை தடவியது போன்ற அநாகரீக செயல்களில் ஈடுபட்டதாகவும் திடுக்கிட வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் 6 பெண் மல்யுத்த வீராங்கனைகள் வைத்த குற்றச்சாட்டுக்கள் இடம் பெற்றுள்ளது. இரண்டாவது எப்.ஐ.ஆர் மைனர் பெண் ஒருவர் தந்தை அளித்த புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் குற்றம் உறுதிசெய்யப்படால் 5 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மல்யுத்த வீராங்கனைகள் முன்வைத்து இருக்கும் குற்றச்சாட்டுக்கள் 2012 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்று இருக்கின்றன. மைனர் பெண் அளித்த புகாரில், போட்டோ எடுக்க வேண்டும் என்ற சாக்கு போக்கு கூறிவிட்டு இறுக்கமாக பிடித்ததாகவும் தனது பக்கமாக அழைத்து, தோளில் வேண்டும் என்றே அழுத்தியதோடு மார்பு பகுதியில் தனது கையை வைத்து தடவியதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த மைனர் பெண் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என திட்டவட்டமாக கூறியதால், தன்னிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது எனவும் தெளிவாக கூறியிருக்கிறார். அதேபோல், மற்றொரு மல்யுத்த வீராங்கனை அளித்த புகாரில், ஒருநாள் இரவு டின்னருக்கு தனியாக அழைத்து சென்று தன்னிடம் தப்பான எண்ணத்துடன் உடலில் பல இடங்களில் தொட்டு தடவியதாக குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.
இந்த சூழலில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள பிரஜ் பூஷன் சரண் சிங் மீது 2 எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications