Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாத சம்பளம் வாங்கும் நபரா நீங்க? புதிய வருமான வரி சட்டத்தில் இதை நோட் பண்ணுங்க! ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வருமான வரி மசோதா 2025இல் பல முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாகப் பழைய சட்டத்தில் இருந்த சிக்கல்களைத் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளன. அதன்படி புதிய சட்டத்தில் "சம்பளங்கள்" அதாவது Salaries என்பதில் இது தொடர்பான தெளிவான விளக்கங்கள் உள்ளன. அது குறித்து நாம் பார்க்கலாம்.

மத்திய அரசு புதிய வருமான வரி சட்டத்தை இப்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பழைய வருமான வரி சட்டத்தில் இருந்த குழப்பங்களை நீக்கும் வகையில் புதிய வருமான வரி சட்டம் இருக்கும்.

budget 2025 income tax

விளக்கங்கள்:

அதன்படி கொண்டு வரப்பட்டுள்ள புதிய வருமான வரி சட்டத்தில் சில அடிப்படையான விஷயங்களுக்குத் தெளிவான விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. குறிப்பாக வரிவிதிப்புக்கான சம்பள வருமானம் எப்படிக் கணக்கிடப்படுகிறது.. அதில் என்ன வகையான வருமானங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை புதிய மசோதா எளிதாக விளக்குகிறது.

வரி செலுத்துவோர் சம்பாதிக்கும் வருமானங்கள் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி விதிக்கப்படுகிறது. புதிய மசோதாவில், இவை ஐந்து வகையான வருமானங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சம்பளம், வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம், வணிகம் அல்லது தொழிலின் மூலம் கிடைக்கும் லாபங்கள், மூலதன ஆதாயங்கள் மற்றும் பிற ஆதாயங்கள் என ஐந்து வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

சம்பளம்

இதில் சம்பளம் அதாவது salaries என்பதன் கீழ் எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதை நாம் பார்க்கலாம்.

  • குறிப்பிட்ட நிதியாண்டில் தற்போது வேலை செய்யும் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட சம்பளம், கம்பெனி மாறியிருந்தால் பழைய நிறுவனத்தில் பெற்ற சம்பளம் என அனைத்துமே இந்த லிஸ்டில் வரும்.
  • குறிப்பிட்ட நிதியாண்டில் முன்கூட்டியே சம்பளம் வந்தாலும் அதுவும் salaries என்பதன் கீழ் தான் வரும்.
  • அதேபோல தாமதமாக (arrears) கிடைக்கும் சம்பளம் என்பது முந்தைய நிதியாண்டில் கணக்குக் காட்டப்படவில்லை என்றால் அது அடுத்தாண்டில் salaries கீழ் வரும்.

எவை எல்லாம் வரும்:

வருடாந்திரம் அல்லது ஓய்வூதியம் (Annuity or pension), பணிக்கொடை (Gratuity), கமிஷன் (Fees or commission), Perquisites, சம்பளம் அல்லது ஊதியத்திற்கு பதிலாக வேறு விஷயத்தைப் பெற்றால், முன்கூட்டியே சம்பளம் (Profits in lieu of, or in addition to, any salary or wages), முன்கூட்டியே பெறப்படும் சம்பளம் (Advance salary), லீவ் என்கேஷ்மெண்ட் (Leave encashment) ஆகியவை வருமானத்தில் வரும்

வருமான வரி விலக்கு தாண்டி வருங்கால வைப்பு நிதிக்கான பங்களிப்பு (Contribution to provident fund beyond the tax-free limit), ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டக் கணக்குகளுக்கு முதலாளியின் பங்களிப்பு (Contribution by central government or any other employer to employee's pension scheme accounts), அக்னிவீர் கார்பஸுக்கு மத்திய அரசின் பங்களிப்பு (Contribution by Central Government to the agniveer corpus) ஆகியவை salaries கீழ் வரும்.

எவை வராது:

சம்பளம் முன்கூட்டியே செலுத்தப்பட்டு, அது ஒரு முறை மொத்த வருமானத்தில் சேர்க்கப்பட்டுவிட்டால் போதும். அது தாமதமாக கிரெடிட் ஆனாலும் அது மீண்டும் சம்பளமாகக் கருதப்படாது. மேலும், குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் பங்குதாரராக இருந்து அதில் கிடைக்கும் போனஸ், கமிஷன் ஆகியவை Salary என்பதன் கீழ் வராது.

இதுபோல பல மாற்றங்கள் புதிய சட்டத்தில் உள்ளன. அவை எளிமையாக விளக்கப்பட்டும் இருக்கிறது. இதன் மூலம் ஆடிட்டர் இல்லாமல் நாமே வருமான வரி தொடர்பான சட்டங்களை எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+