வங்கி கணக்குகளில் இருந்து ரூ.65 கோடி பிடித்தம்.. காங்கிரஸை ரவுண்டு கட்டிய வருமான வரித்துறை!
டெல்லி: வருமான வரி கணக்கை தாமதமாக தாக்கல் செய்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கை வருமான வரித்துறை முடக்கியிருந்த நிலையில், தற்போது முடக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூ.65 கோடியை பிடித்தம் செய்திருக்கிறது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
லோக்சாபா தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாராங்களை தீவிரப்படுத்தியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் இந்த தேர்தலில் தனது பலத்தை நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறது. ஆட்சியில் இல்லாத இந்த 10 ஆண்டுகளில் கட்சி எதிர்கொண்ட பிரச்னைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலங்கள் தற்போது கை நழுவி இருக்கிறது. மூத்த தலைவர்கள் சிலர் வெளியேறி உள்ளனர்.

கடந்த லோக்சபா தேர்தலில் 421 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வென்றது. எனவே இந்த முறை எப்படியாவது பாஜகவை தோற்கடிப்பது என தீவிர முயற்சியுடன் களம் இறங்கியுள்ளது. பாரத் ஜடோ யாத்திரை, விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு ஆதரவு, வேலை வாய்ப்பு பிரச்சனைகளை தீவிரமாக கையில் எடுப்பது என காங்கிரஸ் வீரியமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 16ம் தேதி அதிரடியாக முடக்கியது.
2018-2019 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை 45 நாட்கள் தாமதமாக தாக்கல் செய்ததாகவும், அதற்கு அபராதமாக ரூ.210 கோடி செலுத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி மற்றும் இளைஞர் காங்கிரஸின் 4 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை முடக்கியது. இதில் பொதுமக்கள் நன்கொடை அளிக்கும் வகையில் உள்ள கிரவுட் ஃபண்டிங் வங்கி கணக்கும் அடங்கும்.
வருமான வரித்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் மட்டுமல்லாது பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனம் செய்திருந்தன. இது குறித்து அக்கட்சியின் பொருளாளர் அஜய் மாக்கன், "வருமான வரித்துறையின் நடவடிக்கையால் எங்களால் மின் கட்டணம் கூட செலுத்த முடியவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை. அதுமட்டுமல்லாது பாரத் ஜடோ யாத்திரை போன்ற அரசியல் நடவடிக்கைகள் இதன் மூலம் முடங்கும்" என்று கூறியிருந்தார்.
தேர்தல் பத்திரங்களை உச்சநீதிமன்றம் தடை செய்த அடுத்த நாளில் வருமான வரித்துறை இந்த நடவடிக்கை எடுத்திருப்பதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்று காங்கிரஸ் காட்டமாக விமர்சித்திருந்தது.
இந்நிலையில், முடக்கப்பட்ட காங்கிரஸின் வங்கி கணக்கிலிருந்து ரூ.65 கோடியை வருமான வரித்துறை பிடித்தம் செய்திருக்கிறது. காங்கிரஸின் மூன்று வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60.25 கோடி டிமாண்ட் டிராப்ட்களாக எடுக்கப்பட்ட நிலையில், இந்திய இளைஞர் காங்கிரஸின் கணக்குகளில் இருந்து ரூ.5 கோடி எடுக்கப்பட்டிருக்கிறது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயல் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக, வருமான வரித்துறையின் வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து காங்கிரஸ், வருமான வரி தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இது தொடர்பாக அடுத்த வழக்கு விசாரணை வரும் வரையில் வங்கிக்கணக்குகள் செயல்படலாம் என்று தீர்ப்பாயம் கூறியிருந்தது. இப்படி இருக்கும்போது வருமான வரித்துறை தன்னிச்சையாக ரூ.65 கோடியை பிடித்தம் செய்தது ஏன் என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications