டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரெண்டிங்கில் டாப்... வருமான வரி அறிவிப்புகள்.. பெரும் எதிர்ப்பும்.. கொஞ்சம் ஆதரவும்!

Google Oneindia Tamil News

டெல்லி : இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பாக அறிவிப்புக்கள் தான் ட்விட்டர் டிரெண்டிங்கில் இன்று முதலிடம் பிடித்துள்ளன.

2021-2022 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் அவர் தனது பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

Income tax hashtag is top in twitter trending

கடந்த முறை பட்ஜெட்டில் இவர் ஆற்றியது தான் இந்திய வரலாற்றிலேயே மிக நீண்ட பட்ஜெட் உரையாக இருந்தது. இரண்டு மணி நேரம் 40 நிமிடங்கள் இந்த உரை அமைந்தது.

பட்ஜெட் தொடர்பாக ட்விட்டரில் #IncomeTax ஹாஷ்டாக் தான் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதன் கீழ் வருமான வரி தொடர்பான அறிவிப்புகளை பற்றிய எதிர்ப்பையும், ஆதரவையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹாஷ்டாக்கின் கீழ் இது வரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

Income Tax

வருமான வரி தொடர்பான பட்ஜெட் உரை வீடியோ கிளிப்பிங்குகள், வருமான வரி தொடர்பாக ஊடக செய்திகள், கருத்துக்கள் ஆகியன பதிவிடப்பட்டு வருகின்றன. மூத்த குடிமக்களில் 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். இதே போன்று தொழில்துறையினருக்கும் வருமான வரியில் சலுகை அறிவிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர்.

ஆனால் ஐடி பைலிங்கிலிருந்துதான் இவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதே தவிர இவர்களது பென்ஷனிலிருந்து வரிகற் முறையாக வங்கிகளிலேயே பிடிக்கப்படும் என்று சிலர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இதே போன்று தொழில்துறையினருக்கும் வருமான வரியில் சலுகை அறிவிக்கப்பட்டதை பலரும் வரவேற்றுள்ளனர். இருப்பினும் மாத சம்பளம் பெறுவோருக்கு வருமான வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பலரும் எதிர்பார்த்த ஒரு விஷயமாக இருந்த மாத சம்பளதாரர்களுக்கான வருமான வரி சலுகை இல்லாதது, நடுத்தர மக்களுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது.

English summary
Income tax hashtag is top in twitter trending
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X