வருமான வரி.. 2022-2023 நிதி ஆண்டுக்கு ஆன்லைனில் வருமானவரி கணக்கு தாக்கல் ஆரம்பம்.. வந்தது அறிவிப்பு
டெல்லி: 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி தாக்கல் வசதி ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளது.. இதை வருமானவரித்துறை அறிவித்துள்ளது.. அந்தவகையில், படிவம் 1 மற்றும் படிவம் 4-ல் தாக்கல் செய்யும் பணியை வருமான வரித்துறை தொடங்கி உள்ளது.
வழக்கமாக ஒவ்வொரு வருடமும் வருமானவரித்துறை முறையாக செலுத்தப்படுவது அவசியமாகும்.. அந்தவகையில், 2022-23ஆம் நிதியாண்டுக்கு வருமான வரித் தாக்கலை ஜூலை 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்...

இதற்காகவே, பொதுமக்கள் வசதிக்காக, தற்போது வருமான வரி துறை ஐடிஆர் 1 (ITR) மற்றும் ஐடிஆர் 4 (ITR 4) படிவங்களை ஆன்லைனில் தாக்கல் செய்வதற்கான வசதியை தொடங்கியுள்ளது. ஐடிஆர் 1 மற்றும் 4 படிவங்கள் மாத சம்பளம் வாங்குபவர்கள், மூத்த குடிமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் ஆகியோர் இந்த படிவங்களை தாக்கல் செய்ய வேண்டும்.
யாருக்கு ஐடிஆர் 1: ஐடிஆர் 1 படிவத்தை மாத சம்பளம் வாங்குவோர், மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தனிநபர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஐடிஆர் 4: (ITR 4): ஐடிஆர் 4 படிவத்தை ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டும் தனிநபர்கள், தொழில் முனைவோர், தொழில்முறையாளர்கள், (professionals) தாக்கல் செய்ய வேண்டும். மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் தொழில்முறையாளர்கள் என கூறப்படும்.
இதர படிவங்களில் தாக்கல் செய்வது விரைவில் தொடங்கும் என்று வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வரும் ஜூலை 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். படிவம் 1-ஐ மாத சம்பளதாரர்கள் உள்ளிட்ட தனிநபர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். படிவம் 2-ஐ, வணிக நிறுவனங்கள், தொழில்துறையினர், ரூ.50 லட்சத்துக்கு மிகாத ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்கள் ஆகியோர் தாக்கல் செய்கிறார்கள்.

ட்வீட்: இந்நிலையில், 2022-2023 நிதிஆண்டுக்கான வருமான வரி தாக்கல் வசதி ஆன்லைனில் தொடங்கப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தற்போது அறிவித்துள்ளது..
இதுகுறித்து, வருமான வரித்துறை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு ட்வீட்டையும் பதிவிட்டுள்ளது.. அதில், "2023-24ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கு (AY) ஐடிஆர் 1 மற்றும் ஐடிஆர் 4 படிவங்களை ஆன்லைனில் சமர்பிக்கலாம். ஏற்கெனவே ஐடிஆர் 1, 2 மற்றும் 4 தாக்க்கல் செய்வதற்கான எக்சல் (excel) வசதியும் உள்ளது" என்று வருமான வரித்துறை பதிவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications