வெங்காயம் கருத்தால் சர்ச்சையில் நிர்மலா சீதாராமன்.. 'திறமையற்றவர்' என ராகுல் கடும் தாக்கு
டெல்லி: நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை. அவர் அடிப்படையிலேயே திறமையற்றவர் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெங்காய விலை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.பி ஒருவர் "நீங்களும் வெங்காயம் சாப்பிடுவீர்கள்தானே, உங்களுக்கும் அதன் பாதிப்பு தெரியுமல்லவா, உங்களையும்கூட அது பாதிக்குமல்லவா?" என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நான் அந்த அளவுக்கு நிறைய பூண்டு, வெங்காயத்தை சாப்பிட மாட்டேன். . எனவே, கவலைப்பட வேண்டாம். வெங்காயத்தை சாப்பிடாத குடும்பத்திலிருந்து வந்தவள் நான் என்றார். வெங்காய விலையால் நாட்டு மக்கள் கடும் அவதியடைந்து வரும் நிலையில் நிர்மலாவின் இந்த கருத்து எதிர்க்கட்சியினரை கடும் கோபத்தில் ஆழ்த்தியது.
இதனிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் இது பற்றி கூறுகையில், "நாட்டில் என்ன நடக்கிறது என்பதே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தெரியவில்லை. அவர் அடிப்படையிலேயே திறமையற்றவர்.
வெங்காய விலை உயர்வை பற்றி கேட்டால் நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை, பூண்டு சாப்பிடுவதிலலை என்கிறார் நிதியமைச்சர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது நாட்டின் நிதிபொறப்பை திறமைசாலிகள் கையாண்டனர்" என நிர்மலாவை கடுமையாக ராகுல் விமர்சித்தார்.
-
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications