என்ன அடி.. பவுன்சர்களை துவம்சம் செய்த இளம் வீரர்.. கேப்டன் மெட்டீரியல்.. மூத்த வீரருக்கு வசமான செக்!
டெல்லி: இந்திய டெஸ்ட் அணியில் மூத்த வீரர்களை நீக்கிவிட்டு புதிய வீரர்களை கொண்டு வரலாம் என்று பிசிசிஐ ஆலோசனை செய்து கொண்டு இருக்கும் நிலையில்தான் இளம் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இன்று மிகவும் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்து உள்ளார்.
Recommended Video
இந்தியா நியூசிலாந்து இடையிலான டி 20 தொடர் முடிவிற்கு வந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் தொடங்கி உள்ளது. ரோஹித், பண்ட் போன்ற வீரர்களுக்கு இந்த தொடரின் இரண்டு போட்டியில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
கோலி முதல் டெஸ்டில் இருந்து மட்டும் ஓய்வு பெற்றுள்ளார். அடுத்த டெஸ்டில் இந்திய அணியில் கோலி மீண்டும் கேப்டனாக இணைவார்.

கேப்டன்
இதனால் இன்றைய போட்டியில் ரஹானே கேப்டனாக இந்திய அணியில் செயல்பட்டார். இன்று நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, சாகா, அக்சர் பட்டேல், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ் ஆகியோர் ஆடும் அணியில் சேர்க்கப்பட்டனர். டாஸ் வென்ற கேப்டன் ரஹானே இன்று பேட்டிங் தேர்வு செய்தார்.

பேட்டிங்
இதையடுத்து பேட்டிங் இறங்கிய இந்திய அணியில் இந்த முறையும் மயங்க் அகர்வால் மோசமாக பேட்டிங் செய்து சொதப்பினார். வெறும் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஜெமிசன் பந்தில் அவர் அவுட் ஆனார். அதன்பின் கில் மட்டும் கொஞ்சம் நிதானமாக ரன் சேர்த்துக்கொண்டு இருந்தார். 52 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் ஜெமிசன் பந்தில் போல்ட் ஆனார்.

மூத்த வீரர்கள்
இதனால் மூத்த வீரர்கள் புஜாரா, ரஹானே மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்தது. புஜாரா ஒரு பக்கம் தொடக்கத்தில் இருந்தே சரியான ரிதம் கிடைக்காமல் திணறினார். 88 பந்துகள் பிடித்தவர் 26 ரன்கள் எடுத்த போது சவுதி பந்தில் அவுட்டாகி வெளியேறினார். மயங்க் போலவே கீப்பர் டாமிடம் கேட்ச் கொடுத்து புஜாரா அவுட் ஆனார்.

புஜாரா
கேப்டனாக ரஹானே பொறுப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தேவையான இடைவெளியில் பவுண்டரி அடித்தவர் 6 பவுண்டரி அடித்த நிலையில் 63 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஜெமிசன் பவுலிங்கில் மீண்டும் போல்ட் ஆனார். டெஸ்டில் அறிமுகம் ஆனதில் இருந்தே ஜெமிசன் மிக சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார். பவுன்சர் மற்றும் சரியான லேன்தில் ஸ்டம்பை நோக்கி பந்து வீசி விக்கெட் எடுப்பதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

ஜெமிசன்
இன்றும் ஜெமிசன் பவுலிங் மிக அச்சுறுத்த கூடிய ஒன்றாகவே இருந்தது. டாப் ஆர்டர் வீரர்கள் எல்லோரும் சரிந்த நிலையிலும் இன்று ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து லோக்கல் போட்டிகளில் ஆடிய காரணத்தால் முதல் போட்டி என்ற அறிகுறியே தெரியாத அளவிற்கு இன்று அவர் மிகவும் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

முதிர்ச்சி
அதிலும் ஜெமிசன், சவுதியின் அச்சுறுத்த கூடிய ஷார்ட் பந்துகளை ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் நுணுக்கமாக எதிர்கொண்டார். மோசமாக டாப் ஆர்டர் சரிந்த நிலையில் இந்திய அணியை மீட்டு எடுத்து இப்போதும் களத்தில் ஆடிக்கொண்டு இருக்கிறார். 136 பந்துகள் பிடித்தவர், 7 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று 75 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் இரண்டு மூத்த வீரர்களுக்கு அச்சுறுத்தலாக இவர் மாறியுள்ளார்.

மூத்த வீரர்கள்
ரஹானே, புஜாரா இருவரும் பெரிய பார்மில் இல்லை. இரண்டு பேருக்கும் வயதாகிவிட்டது. இதனால் 4வது அல்லது 5வது இடத்தில் ஆட நல்ல வீரர் இல்லை. அதற்கான சிறப்பான தேர்வாகி ஷ்ரேயாஸ் தெரிகிறார். அதோடு இவர் நல்ல கேப்டன் மெட்டீரியல் என்பதால் நீண்ட கால் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கும். ஷ்ரேயாஸ் ஆடிய இன்றைய காட்டம் காரணமாக இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு செக் வைத்து விரைவில் நிரந்தர இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications