"தீபாவளிக்கு மிக பெரிய பரிசு.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும்.!" பிரதமர் மோடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதற்கிடையே செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி உரையாற்றிய பிரதமர் மோடி, தீபாவளி பரிசு மக்களுக்குக் காத்திருக்கிறது என்றார். தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வரும் சூழலில், பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

நமது நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி முறை கொண்டு வரப்பட்டது. நாடு முழுக்க எல்லா மாநிலங்களிலும் சீரான மறைமுக வரி முறையைக் கொண்டு வரவே மத்திய அரசு இந்த ஜிஎஸ்டி வரி முறையைக் கொண்டு வந்தது. ஜிஎஸ்டியில் பொருட்களை நீக்குவது சேர்ப்பது, வரியை அதிகரிப்பது குறைப்பது உள்ளிட்டவை குறித்த முடிவுகளை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும்.

Independence Day Narendra Modi India

ஜிஎஸ்டி வரிகள்

இப்போது நமது நாட்டில் 5%, 12%, 18%, மற்றும் 28% என 4 பிரிவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி வரியைக் குறைக்க வேண்டும் என்றும் அதில் முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையே இது குறித்து பிரதமர் மோடி இன்று சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பரிசு மக்களுக்குக் காத்திருக்கிறது என்ற பிரதமர் மோடி, தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரியில் சீர்திருத்தம் செய்யப்படும் என அறிவித்துள்ளார்,

பிரமதர் மோடி அறிவிப்பு

தீபாவளிக்குள் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் தெரிவித்தார். கடந்த 8 ஆண்டுகளில் தனது அரசு வரித் தாக்கல் முறையை எளிதாக்க மிகப் பெரிய சீர்திருத்தங்களைச் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். பிரதமர் மேலும் கூறுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் ஜிஎஸ்டியில் பெரிய சீர்திருத்தம் செய்தோம், வரி தாக்கல் செய்யும் முறை எளிதாக்கப்பட்டது. இப்போது அதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஜிஎஸ்டி குறைப்பு

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களுடனும் பேசினோம். அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தத்தைக் கொண்டு வருகிறோம். இது தீபாவளி பரிசாக இருக்கும். தனிநபர் தேவை சேவைகளுக்கான வரி கணிசமாகக் குறைக்கப்படும். இந்த வரி குறைப்பால் சிறு, குறு நடுத்தரத் தொழிற்சாலைகள் பயனடைவார்கள். மேலும் இது பொருளாதாரத்திற்கும் உதவும்" என்றார்.

இப்போது ஜி.எஸ்.டி. விகிதங்கள் 5 முக்கிய வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 21 சதவீதப் பொருட்கள் 5 சதவீத வரி வரம்பிலும், 19 சதவீதப் பொருட்கள் 12 சதவீத வரி வரம்பிலும், அதிகபட்சமாக 44 சதவீதப் பொருட்கள் 18 சதவீத வரி வரம்பிலும் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசு 12% வரம்பை நீக்குவது குறித்து ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் மோடி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

செமிகண்டக்டர் உற்பத்தி

பிரதமர் மோடி மேலும் பேசுகையில், "இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவின் முதல் உள்நாட்டு செமிகண்டக்டர் சிப் கிடைக்கும். இந்த 21ஆம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் நாடுகள் வளர்ச்சியில் புதிய மைல்கற்களை எட்டியுள்ளன. அணுசக்தித் துறையில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கவுள்ளோம். நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியா பல நாடுகளைச் சார்த்திருக்கிறது. அதை மாற்ற இப்போது அணுசக்தியில் கவனம் செலுத்துகிறோம்.

உண்மையாகத் தற்சார்பு இந்தியா உருவாக, நாம் எரிசக்தி சுதந்திரத்தை அடைய வேண்டும். கடந்த 11 ஆண்டுகளில் சோலார் மின்சாரம் 30 மடங்கு அதிகரித்துள்ளது. புதிய அணைகளைக் கட்டி வருகிறோம், மேலும் இந்தியா தற்போது அணுசக்தியில் தீவிரமாகக் கவனம் செலுத்தி வருகிறது" என்று அவர் மேலும் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+