நீரின்றி அமையாது உலகு.. திடீரென்று தமிழில் பேசிய மோடி.. சுதந்திர தின உரையில் ஆச்சர்யம்!
பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.
டெல்லி: பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.
இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடியை ஏற்றினார்.
பிரதமர் மோடிக்கு முப்படை வீரர்கள் மரியாதை அளித்தனர். இதையடுத்து செங்கோட்டையில் முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் இன்று அணிவகுப்பு நடக்க உள்ளது.

தமிழில் பேசினார்
தேசிய கொடியை ஏற்றிய பிரதமர் மோடி மக்கள் மத்தியில் உறையாற்றினார். பிரதமர் மோடி தனது உரையில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த நிலையில் அவர் திடீர் என்று ஒருமுறை தமிழில் பேசினார். சுதந்திர தின உரையில் திருக்குறளை எடுத்துக்காட்டி கூறிய பிரதமர் மோடி, தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து விளக்கும்போது நீரின்றி அமையாது உலகு என தமிழில் பேசினார்.

வேறு என்ன
ஒரே நாடு, ஒரே அரசமைப்பு சட்டத்தை செயல்படுத்தியதில் பெருமிதம் கொள்கிறோம். நீர் தேவையை பூர்த்தி செய்து. தண்ணீர் பஞ்சத்தை போக்குவோம். நீர் திட்டங்களுக்காக ரூபாய் 3.50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறோம். இதற்காக திட்டங்களை கொண்டு வருவோம்

கூறியது என்ன
ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் நாங்கள் தண்ணீர் கொண்டு செல்ல போகிறோம். அனைவருக்கும் சுத்தமான குடிநீர் என்பதே எங்களின் அடுத்த இலக்கு. அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்து நாம் கவலை அடைய வேண்டும். நாட்டில் ஊழல் பெரிய வியாதி போல வளர்ந்து இருக்கிறது.

என்ன திட்டம்
முதலில் நாம் வறுமையை ஒழிக்க வேண்டும். அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதால் இது சாத்தியமாகும். இதற்காக நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளோம். இனியும் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்வோம். எந்த விதமான திட்டங்களை கொண்டு வரவும் நாங்கள் தயாராக இருக்கிறோம், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications