உக்ரைன் போர்.. ரஷ்யாவுக்கு எதிரான ஐநா தீர்மானம்.. இந்தியா மீண்டும் புறக்கணிப்பு.. முழு தகவல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவம் கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ஒரு வாரத்தைக் கடந்தும், இந்தப் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தப் போரை உலக நாடுகள் மிகக் கடுமையாக எதிர்த்தன. பிரிட்டன், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யாவுக்கு எதிராகத் தீர்மானங்களை விதித்து வருகிறது.

இந்தியா வாக்களிக்கவில்லை
இந்தச் சூழலில் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா பொதுச் சபையில் தீர்மான நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்கவில்லை,, உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே போர் அதிகரித்து வரும் சூழலில், இந்த விவகாரத்தில் இதுவரை போடப்பட்ட இரு தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்காத நிலையில், இப்போது 3ஆவது முறையாக இந்தத் தீர்மானத்திலும் இந்தியா வாக்களிக்கவில்லை.

எத்தனை வாக்குகள்
193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச் சபையில் உக்ரைனின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவும் மற்றும் உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 141 வாக்குகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. இது தவிர இந்தியா உட்பட 35 நாடுகள் வாக்களிக்கவில்லை

தீர்மானம் நிறைவேற்றம்
தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற 2/3 பெரும்பான்மை தேவை என்ற நிலையில், 141 நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததால் இது வெற்றிகரமாக நிறைவேறியது. இதில் அணுசக்தி படைகள் குறித்த ரஷ்யாவின் அறிவிப்பு, ரஷ்யாவின் இந்த நடவடிக்கையில் பெலாரஸின் ஈடுபாடு ஆகியவையும் கண்டிக்கப்பட்டு இருந்தது. மேலும், போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் இதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
Recommended Video

பாதுகாப்பு கவுன்சில்
ஆப்கானிஸ்தான், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, அயர்லாந்து, குவைத், சிங்கப்பூர், துருக்கி, உக்ரைன், யுனைடெட் கிங்டம் மற்றும் அமெரிக்கா உட்பட 100க்கும் மேற்பட்ட ஐநா உறுப்பு நாடுகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை 15 நாடுகள் கொண்ட பாதுகாப்பு கவுன்சிலில் இதேபோன்ற தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதில் 11 நாடுகள் ஆதரவு அளிக்க, 3 நாடுகள் எதிராக வாக்களித்தன. அதிலும் இந்தியா வாக்களிக்கவில்லை. இருப்பினும், நிரந்தர உறுப்பினரான ரஷ்யா தனது வீட்டோவைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது.
-
வீரர்களே இல்லாமல் ரஷ்யாவை அலறவிடும் உக்ரைன்! புதினே எதிர்பார்க்காத சீக்ரெட் ஆயுதம் இறக்கிய ஜெலன்ஸ்கி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications