தாமரைக்கு “டேஞ்சர்”.. 2024 தேர்தல் ரேசில் பாஜகவை வேகமாக விரட்டும் ‘இந்தியா’ - இந்தியா டுடே சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 2014 மக்களவைத் தேர்தல் போட்டியில் முன்னிலையில் உள்ள பாஜகவை இந்தியா கூட்டணி வேகமாக விரட்டி வருவது இந்தியா டுடே கருத்துக்கணிப்பு காங்கிரஸ் நிலை குறித்தும் தெரிவித்து உள்ளது.

அடுத்த ஆண்டு மே மாதம் 2024 மக்களவைத் தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்பட்டு வரும் நிலையில் இந்தியா டுடே மற்றும் சி வோட்டர் நிறுவனம் இணைத்து நடத்தி வரும் மூட் ஆஃப் நேஷன் என்ற கருத்துக்கணிப்பின் ஆகஸ்டு மாதம் முடிவு வெளியாகி உள்ளது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி வெல்லப்போகும் இடங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

INDIA alliance advancing near BJP in 2024 election race - India today survey

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் என்.டி.ஏ. 352 இடங்களிலும், இதர கட்சிகள் 95 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 91 இடங்களிலும் வெற்றிபெற்றன. அதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 303 இடங்களிலும், இதர கட்சிகள் 132 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 91 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 2020ல் இந்தியா டுடே மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 316 இடங்களிலும், இதர கட்சிகள் 134 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 93 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 2021 ல் வெளியான கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 321 இடங்களிலும், இதர கட்சிகள் 129 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 93 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 2021 ல் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 298 இடங்களிலும், இதர கட்சிகள் 140 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 105 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 2022 ல் வெளியான கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 296 இடங்களிலும், இதர கட்சிகள் 127 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 120 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

ஆகஸ்டு 2022 ல் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 307 இடங்களிலும், இதர கட்சிகள் 125 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 111 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 2023 ல் வெளியான கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 298 இடங்களிலும், இதர கட்சிகள் 153 தொகுதிகளிலும், இந்தியா (யுபிஏ) 92 இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டது.

தற்போது ஆகஸ்டு 2023 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் என்.டி.ஏ. 306 இடங்களிலும், 'இந்தியா' கூட்டணிக்கு பன்மடங்கு முன்னேறி 193 இடங்களிலும், இதர கட்சிகள் 44 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்புகள் கடந்த ஜூலை 15 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 14 ஆம் தேதி வரை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+