“கியரை” கூட்டிய 'இந்தியா' கூட்டணி.. செப். 5ல் டெல்லியில் ஆலோசனை! சூடுபிடிக்கும் 2024 தேர்தல் பணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மும்பையில் நிறைவடைந்த நிலையில் 5 ஆம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்கள்.

அளும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வேலைகளை தற்போதே தொடங்கிவிட்டன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மக்களவைத் தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக தொடங்கியுள்ளன. எதிர்க்கட்சிகள் பாஜகவுக்கு எதிராக மிகப்பெரிய கூட்டணியை அமைத்து உள்ளன.

India Alliance opposition leaders are going to hold a meeting in Delhi on the september 5

பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் 'இந்தியா' என்ற கூட்டணியை அமைத்துள்ளன. காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா, ஜேடியு, ஆர்ஜேடி, என்சிபி, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாடி, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியாக கூட்டணி அமைத்து இருக்கிறார்கள்.

இவர்களின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் 2 வது கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கூட்டணிக்கு இந்தியா என பெயரிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

2 நாட்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, திமுக சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின், திமுக எம்பி டிஆர் பாலு, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ், டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டன. இந்த நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் மாதம் ஒரு முறை ஒவ்வொரு மாநிலங்களில் கூட்டம் நடத்தி வந்த நிலையில் 4 நாள் இடைவெளியில் டெல்லியில் மீண்டும் ஆலோசனை நடத்துவதன் மூலம், எதிர்க்கட்சிகள் மக்களவைத் தேர்தல் பணிகளில் வேகத்தை அதிகரித்து இருப்பது உறுதிபடுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+