Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அணுசக்தி நிலையங்கள் எங்கெங்கு உள்ளது? திடீரென ரகசியங்களை பரிமாறி கொண்ட இந்தியா - பாகிஸ்தான்.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. கடந்த ஆண்டு தான் இருநாடுகள் இடையே 4 நாள் போர் நடந்து முடிந்தது. இப்படியான சூழலில் தான் இன்று திடீரென்று நம் நாடும், பாகிஸ்தானும் தங்களின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் எங்கெங்கு உள்ளது? என்பது பற்றி தகவல்களை பரிமாறி கொண்டுள்ள நிலையில் அதன் பின்னணி பற்றி முக்கிய விஷயம் வெளியாகி உள்ளது.

நம் நாட்டில் இருந்து தான் பாகிஸ்தான் தனி நாடானது. அன்று முதல் இன்று வரை பாகிஸ்தானுக்கும், நமக்கும் பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் என்பது பயங்கரவாதிகளின் உற்பத்தி மையமாக உள்ளது. அங்கிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பினர் நம் நாட்டுக்கு எதிரான சதி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

india-and-pakistan-today-exchanged-list-of-nuclear-installation-and-facilities-each-other

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் நம் நாட்டை சேர்ந்த 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இதனால் இருநாடுகள் இடையேயான உறவு பெரிய அளவில் மோசமானது.

மேலும் பஹல்காம் தாக்குதலுக்கு நம் நாடு கடும் பதிலடியை கொடுத்தது. கடந்த ஆண்டு மே 7 ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை ‛ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் நம் நாடு பாகிஸ்தானை பந்தாடியது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம், ரேடார் அமைப்புகள் சிதைக்கப்பட்டன.
நம் நாடு அடித்த அடியில் பயந்துபோன பாகிஸ்தான் நம்மிடம் சரணடைந்தது. இதையடுத்து மோதல் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் தான் தற்போது நம் நாடும், பாகிஸ்தானும் திடீரென்று அணுசக்தி நிலையங்கள், அதன் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்தியாவில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதனை சார்ந்த பிற கட்டங்கங்கள் குறித்த விவரங்கள் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் வழங்கப்பட்டது. அதேபோன்று பாகிஸ்தானில் எங்கெங்கு அணுசக்தி நிலையம் மற்றும் அதனை சார்ந்த கட்டமைப்புகள் உள்ளது என்பது பற்றி பாகிஸ்தான் சார்பில் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இன்று வழங்கப்பட்டது.

இதனை நம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்ந்து பகை உள்ள நிலையில் திடீரென்று இப்படியான ரகசியங்களை இருநாடுகளும் பகிர்ந்து கொண்டுள்ளது பலருக்கும் கேள்வியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இந்த தகவல் பரிமாற்றத்தின் பின்னணியில் இருநாடுகள் இடையேயான முக்கிய ஒப்பந்தம் தான் காரணமாகும்.

1988ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி இருநாடுகள் சார்பில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஒவ்வொரு ஆங்கில புத்தாண்டு நாளான ஜனவரி 1ம் தேதி இருநாடுகளும் தங்களின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதனை சார்ந்த பிற கட்டமைப்புகள் குறித்த தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டும். இருநாடுகள் இடையேயான சண்டையின்போது அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர்க்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தம் கட்நத 1991ம் ஆண்டு ஜனவரி 27 ம் தேதி நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு கடந்த 1992ம் ஆண்டில் இருந்து இந்த தகவல்கள் ஆண்டுதோறும் பரிமாறப்பட்டு வரும் நிலையில் 35வது ஆண்டாக இன்றும் இருநாடுகளும் தங்களின் தகவல்களை பகிர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+