மொத்த நாட்டிற்கும் குறி..சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க மாஸ்டர் பிளானில் இந்தியா..வெளியான பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆசியாவில் தனக்கு கடும் போட்டியாக இந்தியா இருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சீனா, அவ்வப்போது இந்தியாவுக்கு எதிராக தனது சித்து வேலைகளை காட்டி வருகிறது. இதனால், இந்தியாவும் பதிலுக்கு தனது ஆயுத பலத்தை தற்போது அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாம். இது குறித்த விவரங்களை இங்கே பார்க்கலாம்.

இந்தியாவுக்கு அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தானில் இருந்து பெரும் அச்சுறுத்தல் உள்ளது. குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் செல்வாக்கை நிரூபிக்க முயற்சிக்கும் சீனா, அதற்கு தடையாக இருக்கும் இந்தியாவிடம் அவ்வப்போது வாலாட்டி வருகிறது. இந்தியாவுக்கு எதிராக சர்வதேச அளவில் ஒருபக்கம் சத்தம் இல்லாமல் காய் நகர்த்தும் சீனா மற்றொரு பக்கம் இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தனது கைக்குள் போட்டுக்கொண்டு பாதுகாப்பு ரீதியாகவும் நெருக்கடி கொடுக்க முயற்சிக்கிறது.

India appears to be developing longer-range weapons reaching targets across China- Sipri report

குறிப்பாக இலங்கைக்கு கடன்களை வாரி வழங்கி கொடுத்து விட்டு பின்னர் அந்த நாட்டில் தனது அஜெண்டாவை நிறுவி இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக செயல்படுகிறது. அதேபோல், இந்தியாவுடன் பகமை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தானுடன் அதீத நெருக்கம் காட்டும் சீனா, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடிப்படையில் பாகிஸ்தானுடன் கை கோர்த்து கொண்டு இந்தியாவை நெருக்கிறது.

அதுபோக, இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலமான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என உரிமை கொண்டாடும் சீனா, எல்லைப்பகுதியில் கட்டுமானங்களை மேம்படுத்தி வருகிறது. அவ்வப்போது இந்திய எல்லைக்குள் சீன படை வீரர்களும் ஊடுருவதும் பிறகு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து விரட்டியடிக்கும் சம்பவங்களும் சமீப காலமாக அதிகரித்துள்ளன.

ஆசியாவை பொறுத்தவரை தனக்கு போட்டி கொடுக்கும் ஒரே நாடாக இந்தியாவைத்தான் சீனா கருதுகிறது. இதனால், பல வழிகளிலும் நெருக்கடிக்கு கொடுக்கும் சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக , இந்தியா தனது அணு ஆயுத பலத்தை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. ஸ்வீடனை சேர்ந்த ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்(Sipri) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வந்துள்ளது.

அணு ஆயுத பலத்தை மட்டும் இன்றி இந்தியா நீண்ட தொலைவு சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஏவுகணை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறதாம். அதாவது ஒட்டுமொத்த சீனாவையும் வல்லமை கொண்ட தொலை தூர ஏவுகணைகளில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவின் அணு ஆயுத தடுப்பில் பாகிஸ்தான் மீதுதான் முக்கிய கவனம் இருந்தாலும் நீண்ட தொலைவு சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆயுதங்களுக்கு இந்தியா அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிகிறது.

சீனா முழுவதும் சென்று தாக்கும் திறன் கொண்ட தொலை தூர ஆயுதங்களும் இதில் அடங்கும். சீனாவின் நடவடிக்கைகள், ஆயுதங்களை நவீன மாயமாக்குதல் உள்ளிட்ட செயல்பாடுகளால் இந்தோ- பசிபிக் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் புவி- அரசியல் பதற்றம் காரணமாக இந்தியாவும் தனது முன்னுரிமைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. சீனாவிற்கு எதிராக தனது பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு படியாகவே இந்தியா தனது ஆயுத திறனை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+