இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்?
டெல்லி: இந்தியா இப்போது சர்வதேச அளவில் மிக முக்கியமான ஒரு சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு மாற்றங்களும் சர்வதேச அளவில் கவனிக்க வைப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே இந்தியாவின் பிறப்பு சதவிகித சரிவு தொடர்பாகப் பிரபலத் தொழிலதிபரும் உலக கோடீஸ்வரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார்.
இப்போது சர்வதேச அளவில் மிகப் பெரிய விஷயமாக வெடித்துள்ளது மக்கள் தொகை சரிவு தான். கடந்த நூற்றாண்டில் மக்கள் தொகை அதிகரிப்பு பிரச்சனையாகக் கருதிய உலக நாடுகள் அதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தன. ஆனால், இந்த நூற்றாண்டில் மக்கள் தொகை சரிவு பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இதே நிலை நீடித்தால் பல நாடுகள் மொத்தமாகக் காணாமல் கூட போய்விடும் என அஞ்சப்படுகிறது.

பிறப்பு விகிதம்
சமீபத்தில் இந்தியாவின் பிறப்பு விகிதம் குறித்து முக்கியமான டேட்டா ஒன்று வெளியானது. அதில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பிறப்பு விகிதம் (Total Fertility Rate) 1.9ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த விகிதம் 2.3ஆக இருந்தது. தற்போது இது வரலாற்றிலேயே முதன்முறையாக, மக்கள் தொகையை அதே நிலையில் வைத்திருக்கத் தேவையான 2.1க்குக் கீழே சரிந்துள்ளது.
மாநில வாரியாகப் பார்க்கும்போது, பீகார் மற்றும் உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு சில வட மாநிலங்கள் மட்டுமே இன்னும் 2.1 என்ற அளவுக்கு மேல் இருக்கின்றன. மற்ற பெரும்பாலான மாநிலங்கள் இந்த அளவை விடக் கீழே சரிந்துவிட்டன. அதிலும் குறிப்பாகத் தலைநகர் டெல்லியின் பிறப்பு விகிதம் வெறும் 1.2 ஆகப் பதிவாகியுள்ளது. இது ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிறப்பு விகிதத்தை விடவும் மிகக் குறைவாகும்!
என்ன ஆபத்து
ஒரு நாட்டின் மக்கள் தொகை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் குறையாமலும், அதிகரிக்காமலும் சீராக இருக்க வேண்டும் என்றால், சராசரியாக ஒரு பெண் தன் வாழ்நாளில் பெற்றுக்கொள்ள வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை 2.1ஆக இருக்க வேண்டும். இதுதான் 'ரீபிளேஸ்மென்ட் லெவல்' எனப்படுகிறது. இந்த அளவு நீண்ட காலத்திற்கு 2.1க்கு கீழே நீடித்தால், அந்த நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சி வேகம் படிப்படியாகக் குறையும். காலப்போக்கில் நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையே சுருங்கத் தொடங்குவதோடு, முதியவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இது பொருளாதாரம் தொடங்கிப் பல வழிகளில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
வடக்கு vs தெற்கு
இந்த பிறப்பு விகிதச் சரிவு என்பது இந்தியா முழுவதும் ஒரே சீராக இல்லை. இதில் பெரிய அளவிலான பிராந்திய இடைவெளிகள் காணப்படுகின்றன. பீகார் போன்ற வட மாநிலங்களில் இன்னமும் பிறப்பு விகிதம் அதிகமாக நீடிக்கிறது. ஆனால், பொருளாதார ரீதியாக நன்கு வளர்ந்த தென் மாநிலங்களிலும், நகர்ப்புறங்களிலும் இந்தச் சரிவு மிக அதிவேகமாக நடந்துள்ளது. டெல்லி, தமிழ்நாடு போன்ற பகுதிகளில் இந்தியாவின் மிகக் குறைந்த பிறப்பு விகிதங்கள் பதிவாகியுள்ளன. இது வளர்ந்த பிராந்தியங்களுக்கும், பின்தங்கிய பிராந்தியங்களுக்கும் இடையே உள்ள பெரும் மக்கள் தொகை இடைவெளியைத் தெளிவாக்குகிறது.
எலான் மஸ்க்
ஐநாவின் மக்கள் தொகை நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையும், இந்தியாவின் பிறப்பு விகிதம் 'ரீபிளேஸ்மென்ட் லெவலுக்குக்' கீழே சென்றுவிட்டதை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகவே பிரபலத் தொழிலதிபரும் உலக பணக்காரருமான எலான் மஸ்க் எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இந்தியாவின் பிறப்பு விகிதம் என்பது மக்கள் தொகையைச் சீராகப் பராமரிக்கத் தேவையான அளவை விடக் கீழே சரிந்துவிட்டது. குறிப்பாக, நன்கு படித்தவர்கள் மத்தியில் இந்தப் பிறப்பு விகிதச் சரிவு பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது!" என்று கூறியுள்ளார்.
என்ன நடக்கும்!
குழந்தைகள் பிறப்பது குறைந்தாலும் இந்தியாவின் மக்கள் தொகை இன்னும் சில தசாப்தங்களுக்குத் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்கிறார்கள் துறை சார்ந்த நிபுணர்கள். அதற்கு Population Momentum தான் காரணம். அதாவது, முந்தைய தலைமுறையின் விளைவாக இந்தியாவில் தற்போது குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வயதில் இருக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. அவர்கள் மூலமாக மக்கள் தொகை தற்காலிகமாக உயர்ந்தாலும், இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் இந்த வளர்ச்சி வேகம் முற்றிலும் நின்று, மக்கள் தொகை தலைகீழாகச் சுருங்கத் தொடங்கும்.
இந்தியாவின் இந்த புதிய மக்கள் தொகை மாற்றம், எதிர்காலத்தில் நாட்டின் உழைக்கும் வர்க்கத்தின் எண்ணிக்கை, ஒட்டுமொத்தப் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் மிக பெரிய தாக்கங்களை ஏற்படுத்தப் போவது மட்டும் உறுதி!
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications