அரசியல் சாசன நாள்- ராகுல் காந்தியை பேச அழைக்கனும்.. லோக்சபா சபாநாயகருக்கு இந்தியா கூட்டணி கடிதம்
டெல்லி: அரசியல் சாசன தினத்தை முன்னிட்டு நாடாளுமன்ற பழைய கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பேசுவதற்கு அழைக்க வேண்டும் என்று லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு 'இந்தியா' கூட்டணியின் தலைவர்கள் கடிதம் அனுப்பி உள்ளனர். பழைய நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் அரசியல் சாசன நாள் நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
நாடு விடுதலை அடைந்த பின்னர் 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசனம் ஏற்கப்பட்டது. இது 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்த ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின் முதலாவது ஆட்சியில்தான் நவம்பர் 26-ந் தேதி அரசியல் சாசன நாளாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26-ந் தேதி இந்திய அரசியல் சாசன நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டெல்லியில் அரசியல் சாசன நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் மைய மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் உள்ளிட்டோர் நாளை பங்கேற்கின்றனர். நாளை மாலை உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்த நிலையில் இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் எப்படி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் பழைய நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நாளை நடைபெறும் அரசியல் சாசன நிகழ்ச்சியில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும் பேச அனுமதிக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் அனுப்பவும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தீர்மானித்தனர்.
ஆனால் இதனை மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜூ திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். இது தொடர்பாக கிரண் ரிஜுஜூ கூறுகையில், என்ன நிகழ்ச்சி நிரல் என்பது கூட தெரியாமல் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இருக்கின்றனர். பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி பேசவில்லை என்பது கூட அவர்களுக்கு தெரியவில்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications