இந்தியா கூட்டணி கூட்டம் புறக்கணிப்பு..தேர்தல் ஆணையரை நீக்க கையெழுத்து? காங்கிரசை தவிக்க விடும் திமுக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற உள்ளது. ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. ஞானேஷ்குமார் பதவி நீக்கம், தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. திமுக இந்தக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெக பக்கம் காங்கிரஸ் தாவியதையடுத்து, இந்தியா கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் திமுக நாளை நடைபெற உள்ள இந்தியா கூட்டணி தலைவர்களின் கூட்டத்திலும் பங்கேற்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் தேர்தல் ஆணையரை நீக்க கோரும் எதிர்க்கட்சிகளின் நோட்டிசில் திமுக கையழுத்திடலாம் என்று விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

INDIA Bloc

இந்தியா கூட்டணி கூட்டம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் பிற இரண்டு தேர்தல் ஆணையர்களுக்கும் இடையே கருத்து முரண் ஏற்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்பட்டதாக எதிர்க்கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தை வைத்து தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் குரல்கொடுத்து வருகின்றன. தேர்தல் ஆணையரை பதவி நீக்க வலியுறுத்தி டெல்லியில் நாளை இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணிக்க அகிலேஷ் யாதவ் திட்டமிட்டுள்ளார். அதேபோல, இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்த திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க போவது இல்லை என்று தெரிவித்துள்ளது.

நோட்டீஸ் அளிக்க திட்டம்

இந்தியா கூட்டணியில் நாங்கள் இல்லை என்றும், காங்கிரஸ் கட்சிதான் உறவை முறித்துக்கொண்டு இரண்டு அமைச்சர் பதவிகளுக்காக தவெக பக்கம் நெருங்கிவிட்டது என்று திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கூட்டும் இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காவிட்டாலும், தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளிக்க திட்டமிட்டுள்ளன.

இந்த நோட்டீசில் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மியும், திமுகவும் கையெழுத்து இட முடிவு செய்து இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இது குறித்து டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:- சமாஜ் வாடி கட்சியின் தலைவர் அகிலேஷும் கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சிதான் காரணம். 2 அமைச்சர் பதவிகளுக்காக தவெகவை அக்கட்சி தேர்வு செய்துள்ளது. தவெகவுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது. காங்கிரஸ் எங்கள் கூட்டணியில் இல்லை. அவர்களை நாங்கள் எப்படி ஆதரிக்க முடியும்? அவர்கள் அழைத்த கூட்டத்திற்கு நாங்கள் எப்படி செல்ல முடியும்?" என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

எனினும், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் நேற்று கூறுகையில், மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பான முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி இருந்ததால் அகிலேஷ் யாதவ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் மற்றும் பிற மூத்த தலைவர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+