மோடிக்கு சிக்கல்.. ஒரே அணியில் திரண்ட எதிர்க்கட்சிகள்.. அக்டோபர் 2 முதல் நாடு முழுக்க பேரணி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், தலைமை தேர்தல் ஆணையரை எதிர்த்து வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் ஜனநாயகத்தை காப்போம் என்ற பேரணியையும் இந்தியா கூட்டணி அறிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் விவகாரம் தான் பெரிதாக வெடித்துள்ளது. அவரது முடிவுகள் குறித்து மற்ற தேர்தல் ஆணையர்கள் கடந்த 10 மாதங்களில் 14 முறை ஆட்சேபனை தெரிவித்ததாக தகவல்கள் வெளியான நிலையில், அது பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.

election commission SIR India

இந்தியா கூட்டணி ஆலோசனை

நேற்றைய தினம்தான் இது தொடர்பாக ஆலோசிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டமும் நடந்தது. அதில் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழலில் தான் இன்றைய தினம் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.

போராட்டங்கள் குறித்து ஆலோசனை

இதில் தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.. மேலும், நாடாளுமன்றத்தில் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பல்வேறு மாநிலங்களிலும் போராட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவது குறித்து இந்தியா கூட்டணி திட்டமிட்டு வருகிறது.

கூட்டணி கட்சிகள்

காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்றனர். திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி, கல்யாண் பானர்ஜி மற்றும் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் கலந்து கொண்டனர். உள்ளனர். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, ஆர்ஜேடி, தேசியவாத காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி, சிவசேனா தாக்கரே கேரள காங்கிரஸ்பிரதிநிதிகளும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

புறக்கணிப்பு

அதேநேரம் ஆம் ஆத்மி கட்சி இந்த இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும், தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிரான பதவி நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகிய திமுகவும் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், திமுகவும் ஞானேஷ் குமாருக்கு எதிரான நடவடிக்கைக்கு ஆதரவு இருப்பதாக கூறியுள்ளது.

பேரணி

இந்த கூட்டம் முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கார்கே, தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டத்தை அறிவித்துள்ளார். ஞானேஷ் குமாருக்கு எதிராக 'ஜனநாயகத்தைக் காப்போம்' என்ற பேரணியை அக்டோபர் 2ஆம் தேதி முதல் 'இந்தியா' கூட்டணி நடத்தவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் கார்கே அறிவித்தார்.

இந்த விவகாரத்தை ஒரேயணியாக இணைந்து எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்தை சாடிய கார்கே, தேர்தல் ஆணையர்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி பொம்மைகளைப் போல தங்களுக்கு ஏற்றவாறு இயக்குவதாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்தல் ஆணைய விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் முறையிட முடிவு செய்துள்ளதாகவும் இதற்காக அக்டோபர் இரண்டாவது வாரத்தில் அவரை சந்திக்கவுள்ளதாகவும் கார்கே குறிப்பிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+