ஞானேஷ் குமாருக்கு எதிராக பொது தகுதி நீக்க நிகழ்வு போராட்டம்! டெல்லியில் இன்று காங்கிரஸ் தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாதிரி நாடாளுமன்றம் கூட்டம் என்ற பெயரில் போராட்டத்திற்கு இன்று காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. நேற்று நடைபெற இருந்த போராட்டம் மழையால் ஒத்திவைக்கப்பட்டதாகவும் இன்று எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ராம் லீலா மைதானம் நோக்கி பேரணி நடத்துவோம் என்றும், இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என ராகுல் காந்தியும் கூறியிருந்தார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகளில் தன்னிச்சையாக செயல்பட்டதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை ஓய மாட்டோம் என்று கூறி காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சி எம்பிக்கள் டெல்லியி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

INDIA alliance Rahul Gandhi Gyanesh Kumar

இதே விவகாரத்தில் டெல்லியில் பிரமாண்ட பேரணியை காங்கிரஸ் நடத்த உள்ளது. இந்த பேரணியில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கானவர்கள் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க ஞானேஷ்குமாரை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக மாதிரி நாடாளுமன்றம் கூட்டம் என்ற பெயரில் போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது.

பொது பதவி நீக்க நிகழ்வு என்ற பெயரில் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், மழையால் நேற்று போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்கு பிறகு, தலைமை தேர்தல் கமிஷனருக்கு எதிரான பொது தகுதி நீக்க நிகழ்வு போராட்டத்தை இன்று நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து ராகுல் காந்தி நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- "மழை காரணமாக போராட்டம் இன்று ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ராம் லீலா மைதானம் நோக்கி பேரணி நடத்துவோம். இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+