ரத்தம் தோய்ந்த வரலாறு! சீனா தாக்குதல்- 20 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல்!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் எல்லையில் இதே ஜூன் 15-ல் கல்வான் பள்ளத்தாக்கில் நமது நாட்டின் 20 ராணுவ வீரர்கள் சீனாவின் தாக்குதலில் வீரமரணம் அடைந்தனர்.
கல்வான் பள்ளத்தாக்கு.. ஜம்மு காஷ்மீரின் லடாக் பிராந்தியத்தில் உள்ளது. லடாக் மற்றும் சீனா ஆக்கிரமித்திருக்கும் இந்திய நிலப்பகுதியான அக்சாய் சீனா இடையே இந்த கல்வான் பள்ளத்தாக்கு அமைந்திருக்கிறது. இந்தியா, சீனா இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடும் இந்த கல்வான் பள்ளத்தாக்கின் ஊடே செல்கிறது. 1962 யுத்தத்தில் கல்வான் நதி, இந்தியா, சீனா இருநாடுகளுக்கும் முக்கியமானதாக இருந்தது.

கல்வான் பள்ளத்தாக்கில் சீனா தமது பகுதியில் பல்வேறு கட்டுமானங்களை உருவாக்கி விட்டது. இதற்கு பதிலடியாக நமது பகுதியில் கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டன. இந்த கட்டுமானங்கள் சட்டவிரோதமானவை என சட்டாம்பிள்ளைத்தனமாக சீனா பேசி வந்தது. இதனையடுத்து 2020-ம் ஆண்டு இதே ஜூன் 15-ல் தான் இடைஅப்பகுதியில் இந்தியா- சீனா வீரர்களிடையே கைகலப்பும் மரணங்களும் நிகழ்ந்தன. துப்பாக்கி மோதல் எதுவும் நிகழாமல் கூரிய ஆணிகள் உள்ளிட்டவைகளை பொருத்திய கட்டைகளால் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். முதலில் இம்மோதல்களில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பின்னர் மேலும் 17 பேர் என மொத்தம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என நமது ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேநேரத்தில் கல்வான் பள்ளத்தாக்கில் சீனாவின் இழப்பு என்ன? என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு மோதலில் பழனி எனும் தமிழ்நாட்டு ராணுவ வீரரும் வீர மரணம் அடைந்தார்.
2017-ம் ஆண்டு பூட்டான் டோக்லாம் பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்களின் மோதலைத் தொடர்ந்து நிகழ்ந்த மிகப் பெரிய மோதலாகும். கல்வான் பள்ளத்தாக்கு மோதலானது இருநாடுகளிடையே யுத்த சூழ்நிலையை உருவாக்கக் கூடியதாகவும் உருமாறியது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இப்பேச்சுவார்த்தைகளில் அதிகபட்சமாக இருதரப்பும் எல்லைகளில் இருந்து படைகளை விலக்குவது தொடர்பாகவும் மட்டும் முடிவு எடுத்துள்ளன. இன்னமும் ஆக்கப்பூர்வமான முடிவுகள் இப்பேச்சுவார்த்தைகள் மூலம் உருவாக்கப்படவில்லை என்கின்றனர் பாதுகாப்பு ஆய்வாளர்கள்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications