நெருக்கமாகும் இந்தியா - சீனா.. 6 ஆண்டுக்கு பின் டெல்லியில் இருந்து நேரடி விமானம்..அறிவித்த நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று தொடங்கும் 2 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது பற்றி விவாதிக்க உள்ளார். இதற்கிடையே தான் 6 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவின் குவாங்சூ நகருக்கு நேரடியாக விமான சேவை தொடங்க உள்ளதாக சீனாவை சேர்ந்த சீன தெற்கு ஏர்லைன்ஸ் எனும் விமான நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

india-china-flight-service-china-southern-airlines-to-resume-flight-service-from-delhi-guangzhou

சீனாவின் முன்னணி விமான நிறுவனமான சீன தெற்கு ஏர்லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் மீண்டும் இந்தியா - சீனா இடையே விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி டெல்லி - குவாங்சூ இடையே சீனாவின் தெற்கு ஏர்லைன்ஸ் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் இயங்க உள்ளது. இந்த விமான சேவை செப்டம்பர் மாதம் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

தற்போது அறிவிப்பு மட்டுமே வெளியாகி உள்ளது. தினமும் எத்தனை விமானங்கள் இயக்கப்பட உள்ளன. எந்தெந்த நேரங்களில் விமானங்கள் இயக்கப்பட உள்ளது என்பது பற்றிய விவரம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி அடுத்தக்கட்டமாக அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக இந்தியா - சீனா இடையே இருந்த மோதல் போக்கு இருந்து வந்தது. தற்போது இருநாடுகள் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. 7 ஆண்டுகளுக்கு பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் இன்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ள 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்க உள்ளார்.

அதன்பிறகு இந்தியா - சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து, ஜி ஜின்பிங் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இது இருநாடுகளுக்கு இடையேயான உறவை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்லும் என்று சொல்லப்படுகிறது.

ஏனென்றால் இந்தியா - சீனா இடையே எல்லை பிரச்சனை உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான சந்திப்பு, பேச்சுவார்த்தை தடைப்பட்டது. இதனால் ஜி ஜின்பிங் இந்தியாவுக்கு வராமலேயே இருந்த நிலையில் இன்று டெல்லியில் தரையிறங்க உள்ளார்.

இப்படியான சூழலில் சீனாவின் தெற்கு ஏர்லைன்ஸ் சார்பில் டெல்லி - குவாங்சூ இடையேயான விமான சேவை தொடங்குவதாக வெளியாகி உள்ள அறிவிப்பு இருநாடுகளின் உறவுக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு சீனாவில் நடநத ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து தடைப்பட்ட விமான சேவைகள் தொடங்கப்பட்டன.

முன்னதாக கல்வான் பள்ளத்தாக்கு மோதல் காரணமாக நிறுத்தப்பட்ட விமானங்கள் மீண்டும் இயங்க தொடங்கின. 6 ஆண்டு இடைவெளிக்கு பிறகு டெல்லி - சீனா இடையே ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் விமான சேவை தொடங்கப்பட்டது. ஏர் இந்தியா சார்பில் தலைநகர் டெல்லியில் இருந்து சீனாவின் ஷாங்காய் நகருக்கு இடையே விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் பெய்ஜிங் - டெல்லி இடையே ஏர் சீனா என்ற நிறுவனம் சார்பில் விமான சேவை தொடங்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது டெல்லி - குவாங்சூ இடையே சீனாவின் தெற்கு ஏர்லைன்ஸ் விமான சேவையை தொடங்குவதாக அறிவித்துள்ளது. இது இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்டு வருவதை காட்டுகிறது. தொடர்ந்து இருநாடுகள் இடையே இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு என்பது நல்ல நட்புக்கு வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+