இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா: 4 லட்சம் பேர் மருத்துவமனையில் சிகிச்சை
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,352 பேரை கடந்துள்ளது. 366 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் புதிதாக 45,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 34,791 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,99,778 பேராக உயர்ந்துள்ளது.
Recommended Video
கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனாவின் பிடியில் உலகம் சிக்கியுள்ளது. கொரோனா முதல் அலையில் அதிகம் பாதிக்கப்படாமல் இந்தியா தப்பினாலும் இரண்டாவது அலையில் அதிகம் பாதிக்கப்பட்டது. தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்தது. தினசரியும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதன் காரணமாக படிப்படியாக கட்டுக்குள் வந்தது. கொரோனா மூன்றாவது அலை அக்டோபர் மாதத்தில் தீவிரமடையும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஒரே நாளில் புதிதாக 45,352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவில் இருந்து 34,791 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் மொத்தம் 3,20,63,616 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் 97.45% பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் கொரோனாவால் 366 பேர் மரணமடைந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,39,895 பேராக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் 67,09,59,968 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 65 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டது, மேலும் 1.20 கோடி டோஸ் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் சுமார் 4.36 கோடி டோஸ் தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,097 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 3வது நாளாக தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி உள்ளது.
கேரளாவில் அதிகபட்சமாக திரிசூர் மாவட்டத்தில் 4324 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எர்ணாகுளத்தில் 3718, கோழிக்கோட்டில் 3471 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 21,634 பேர் குணம் அடைந்துள்ளனர். தொற்று பாதிப்புக்கு மேலும் 188 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21149 ஆக உயர்ந்துளள்து.
தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2, 40, 186 ஆக உள்ளது. தொற்று பாதிப்பு விகிதம் 18.41 சதவிகிதமாக உள்ளது. இந்தியாவிலேயே கேரளாவில்தான் அதிக அளவில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. கேரளாவில் நேற்று 1,74,307 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 32,097 பேருக்கு தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று பகல் நேர ஊரடங்கு அமல் படுத்தியும் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறையவில்லை.
இதனிடையே சர்வதேச விமானங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையால், இந்தியாவை விட்டு வெளியேற முடியாமல் இருக்கும் வெளிநாட்டவரின் விசா மற்றும் தங்கும் காலம் 2021 செப்டம்பர் 30 வரை செல்லும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விசா நீட்டிப்புக்காக இந்தியாவில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் எந்த விண்ணப்பமும் அளிக்கத் தேவையில்லை என்றும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குப் பிறகும் இந்தியாவில் தங்கியிருக்க விரும்புகிறவர்கள் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி விண்ணப்பம் அளிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஆப்கானில் இருந்து வந்தவர்களுக்கு தனி விசா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications