24 மணி நேரத்தில் 85 ஆயிரம் பேருக்கு புதிதாக கொரோனா தொற்று.. மத்திய அரசு தகவல்
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 85,362 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் 1,089 பேர் மரணமடைந்துள்ளார்கள்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினந்தோறும் மாநிலங்களின் கொரோனா பாதிப்பு விவரங்களுடன் இந்திய அளவில் கொரோனா குறித்த தகவல்களை மத்திய அரசு தினந்தோறும் காலை வேளையில் வெளியிட்டு வருகிறது.

அதன்படி மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் கொரோனாவால் 59,03,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 85,362 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 9.60 லட்சமாக உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 93,379 ஆகும். நேற்று ஒரே நாளில் 1,089 பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர்.












Click it and Unblock the Notifications