கொரோனா சோதனை உபகரணங்களை வாங்க தாமதித்ததால்.. இந்தியாவில் கடும் தட்டுப்பாடு.. ராகுல் காந்தி
டெல்லி: கொரோனா வைரஸ் சோதனை உபகரணங்களை வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது என்று மத்திய அரசை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை 10800க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிப்பை கண்டுபிடிக்க தேவையான சோதனை உபகரணங்கள், மருத்துவ பாதுகாப்பு உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன

இதுதொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதில் ";கொரோனா வைரஸ் நோய் தொற்றிற்கான சோதனை உபகரணங்கள் வாங்குவதில் இந்தியா தாமதம் செய்துவிட்டது. அதனால், தற்போது, சோதனை உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

10 லட்சம் இந்தியர்களுக்கு வெறும் 149 சோதனைகள் மட்டுமே செய்யப்படுகிறது. லாவோஸ் நாடு (157), நைஜிர்(182) மற்றும் ஹோண்டரஸ்(162) ஆகிய நாடுகளின் நிலையில்தான் நாம் உள்ளோம். பெரிய அளவிலான சோதனைகள் தான் (Mass testing) வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முக்கியமான பங்கு வகிக்கும். ஆனால், அந்த முயற்சியில் தற்போது நாம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications