டாப் சீக்ரெட் ராணுவ தொழில்நுட்பத்தை ரஷ்யாவுக்கு விற்ற ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ்? அதிகாரிகள் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் ரகசியமான ராணுவ தொழில்நுட்பத்தைக் கருப்பு பட்டியலில் உள்ள ரஷ்ய நிறுவனத்துடன் பகிர்ந்து கொண்டதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கிடையே இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள், உரியச் சட்ட விதிகளைப் பின்பற்றியே செயல்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசுக்குச் சொந்தமான விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனம் இந்திய பாதுகாப்புப் படைக்காக பல்வேறு ராணுவ உபகரணங்கள் மற்றும் கருவிகளைத் தயாரித்துக் கொடுத்து வருகிறது. இந்த ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் குறித்து அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.

Russia India

நியூயார்க் டைம்ஸ்

அதாவது ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் கருப்பு பட்டியலில் இருக்கும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு ராணுவ தொழில்நுட்பத்தைப் பகிர்ந்ததாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டு இருந்தது. இது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட இந்த செய்தி தவறானது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொய்யான மற்றும் தவறாக வழிநடத்தும் அறிக்கையை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். பிரச்சினைகளை உருவாக்கி, தங்கள் சொந்த அரசியல் நலனுக்காக உண்மைகளைச் சிதைக்க இப்படிச் செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் மேலும் கூறுகையில், "நியூயார்க் டைம்ஸ் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இந்திய நிறுவனம், வர்த்தகக் கட்டுப்பாடுகள் மற்றும் பயனர் உறுதிமொழிகள் குறித்த அனைத்து சர்வதேச கடமைகளையும் கவனமாகப் பின்பற்றியுள்ளது.

மறுப்பு

இந்தியாவின் வலுவான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பு, அதன் வெளிநாட்டு வணிக முயற்சிகளைத் தொடர்ந்து வழிநடத்தும். ஊடக நிறுவனங்கள் இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடும் போது அடிப்படை சரிபார்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் அவர்கள் அதைச் செய்யவில்லை" என்று அந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேநேரம் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் அளிக்கவில்லை.

என்ன செய்தி

கடந்த மார்ச் 28ம் தேதி நியூயார்க் டைம்ஸ் இது தொடர்பான செய்தியை வெளியிட்டு இருந்தது. அதாவது பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஹெச்ஆர் ஸ்மித் குழுமம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் வழியாக டிரான்ஸ்மிட்டர்கள், காக்பிட் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை ரஷ்யாவைச் சேர்ந்த ஆயுத நிறுவனமான ரோசோபோரோனுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. இந்த ரோசோபோரோன் நிறுவனம் அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+