அடேங்கப்பா! உலகிற்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அள்ளி தரும் இந்தியா. அப்போ நமக்கு எத்தனை கிடைக்கும்?
டெல்லி: உலகளவில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அதிகம் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. இதன் மூலம் அதிக பேருக்கு மிக விரைவில் தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியும்.
உலகெங்கும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது.
இருப்பினும், உலக நாடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தடுப்பூசி உற்பத்தி இல்லை. இதன் காரணமாகப் பல வளரும் நாடுகளும் பின்தங்கிய நாடுகளும் தடுப்பூசி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஸ்புட்னிக் வி தடுப்பூசி
பைசர், மாடர்னா, அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளுடன் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை பல நாடுகளும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இருப்பினும், அந்தத் தடுப்பூசியின் மருத்துவ முடிவுகள் அப்போது வெளியாகவில்லை. இதன் காரணமாக உலக நாடுகள் இந்தத் தடுப்பூசியைப் பயன்படுத்த தயக்கம் காட்டின.

பலன் எவ்வளவு?
இந்தச் சூழ்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் மருத்துவ சோதனை முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் கொரோனா பரவலுக்கு எதிராக ஸ்புட்னிக் வி 91.6% பலன் அளிப்பதாகக் கூறப்பட்டிருந்தது. இது இந்தியாவில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிகளைவிட அதிகமாகும். அமெரிக்க தடுப்பூசிகளை விட இவை குறைந்த விலையில் கிடைப்பதால் பல வளரும் நாடுகளும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியைப் பெறுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

இந்திய நிறுவனங்கள்
இதன் காரணமாக ஸ்புட்னிக் வி உற்பத்தியை அதிகரிக்க ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காகப் பல உலக நாடுகளுடனும் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 25 கோடி தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய கிளாண்ட் பார்மா நிறுவனத்துடன் ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேபோல ஸ்ட்ரைட்ஸ் பார்மா, ஹெட்டெரோ உள்ளிட்ட நிறுவனங்களுடனும் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெலியாகியுள்ளது.

50 கோடி தடுப்பூசி
ஏற்கனவே, டாக்டர் ரெட்டி நிறுவனத்துடன் தடுப்பூசி ரஷ்யா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் குறைந்தபட்சம் 50 கோடி ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது. இதில் 25 கோடி தடுப்பூசிகள் இந்தியர்களின் பயன்பாட்டிற்கு அளிக்கப்படும் என்றும் மற்றவை வளரும் நாடுகளுக்கு அளிக்கப்படும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

51 நாடுகளில் ஒப்புதல்
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது 51 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்தத் தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கும் என்பதாலும் மிகக் குறைந்த வெப்பநிலையில் சேமிக்க தேவையில்லை என்பதாலும் வரும் காலங்களில் இந்தத் தடுப்பூசியே பெரும்பாலான நாடுகளில் பயன்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஸ்புட்னிக் வி தடுப்பூசிக்கு அனுமதி கோரி டாக்டர் ரெட்டி நிறுவனம் தாக்கல் செய் மனு தற்போது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications