30% குறையும் சொகுசு கார்கள்.. பீர், ஒயின் விலை கூட சரியும்! இந்தியா- EU டீலால் விலை எந்தளவு சரியும்?
டெல்லி: கடந்த 15 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த இந்திய ஐரோப்பிய வர்த்தக ஒப்பந்தம் இப்போது இறுதியாகியுள்ளது. இரு தலைவர்களும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம் மூலம் பல்வேறு பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி கிட்டத்தட்ட முழுமையாக நீக்கப்படுகிறது. இதனால் எந்தப் பொருட்களின் விலை குறையும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்!
இந்தியா ஐரோப்பிய ஒன்றியம் இடையே மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் பல்வேறு பொருட்களின் வரி விகிதம் குறையும். இதன் மூலம் அவற்றின் விலையும் கூட கணிசமாகக் குறையும்!

சொகுசு கார்கள்
அதில் பிரதானமாகச் சொகுசு கார்களை சொல்லலாம். பல சொகுசு கார்கள் ஐரோப்பாவில் இருந்தே இந்தியாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படி இறக்குமதி செய்யப்படும்போது அதற்கு 110% வரை வரி விதிக்கப்படுகிறது. இதனால் காரின் விலையே கிட்டத்தட்ட இரட்டிப்பாகிறது. அதாவது ஒரு கோடி ரூபாய் கார் என்றால் அதன் விலை ரூ.2 கோடிக்கு மேல் ஆகிறது. இந்தச் சூழலில் தான் அதற்கான வரியும் குறைக்கப்படுகிறது. 110%ல் இருந்து 40%ஆக குறைக்கப்படுகிறது. 40% என்பது சற்று அதிகம் என்றாலும் கூட இனி ரூ.1 கோடி காரை ரூ.1.4 கோடிக்கு வாங்கலாம் என்பது நல்ல செய்தி.
குறையும் வரி
இது தவிரப் பல முக்கிய தொழிற்துறைப் பொருட்களுக்கான வரிகள் முற்றிலுமாக நீக்கப்படுகின்றன. €16.3 பில்லியன் மதிப்புள்ள இயந்திரங்கள் மற்றும் மின்சார உபகரணங்களுக்கு முன்பு 44% வரை வரி விதிக்கப்பட்ட நிலையில் இப்போது அவை நீக்கப்படுகிறது., €6.4 பில்லியன் மதிப்புள்ள விமானம் மற்றும் சாட்டிலைட்களுக்கு முன்பு 11% வரை வரி இருந்த நிலையில், இப்போது அதுவும் நீக்கப்படுகிறது. €3.4 பில்லியன் மதிப்புள்ள ஆப்டிகல், மருத்துவ, அறுவை சிகிச்சை கருவிகளுக்கு முன்பு 27.5% வரை வரி இருந்த நிலையில், அதுவும் கிட்டத்தட்ட ஜீரோ ஆக்கப்பட்டுள்ளது.
இதேபோல், €2.2 பில்லியன் பிளாஸ்டிக் பொருட்கள் (முன்பு 16.5% வரி), €3.2 பில்லியன் கெமிக்கல் (முன்பு 22% வரி), €1.5 பில்லியன் இரும்பு மற்றும் ஸ்டீல் (முன்பு 22% வரி), €1.1 பில்லியன் மருந்துப் பொருட்கள் (முன்பு 11% வரி) ஆகியவற்றுக்கும் கிட்டத்தட்ட அனைத்துப் பொருட்களுக்கும் தற்பொழுது 0% வரி எனக் குறைந்துள்ளது.
ஒயின், பீர் விலை குறைய போகுது
ஒயின் மீது தற்போது 150% வரை இருந்த வரிகள் இப்போது குறைக்கப்படுகிறது. உயர்தர ஒயின்களுக்கு 20% ஆகவும், நடுத்தரத் தர ஒயின்களுக்கு 30% ஆகவும் வரி குறைக்கப்படும். 150% வரை இருந்த ஸ்பிரிட்ஸ் வரிகள் 40% ஆகவும், 110% ஆக இருந்த பீர் வரிகள் 50% ஆகவும் குறைக்கப்படுகின்றன.
விவசாயப் பொருட்கள்
அதேபோல ஐரோப்பாவில் இருந்து வரும் பல விவசாய பொருட்களின் வரியும் குறைக்கப்படுகிறது. ஆலிவ் எண்ணெய், பிற தாவர எண்ணெய்கள் (முன்பு 45% வரி), பழச்சாறுகள், ஆல்கஹால் அல்லாத பீர் (முன்பு 55% வரி), ரொட்டிகள், பேஸ்ட்ரிகள், பிஸ்கட்டுகள், பாஸ்தா, சாக்லேட், செல்லப்பிராணி உணவு (முன்பு 50% வரி) போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், மற்றும் ஆட்டு இறைச்சி (முன்பு 33% வரி) மீதான வரிகள் முழுமையாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிவிப் பழங்கள் மற்றும் பேரிக்காய்கள் மீதான 33% வரிகள் 10% ஆகக் குறைக்கப்படும். அதேபோல், பிற இறைச்சி தயாரிப்புகளுக்கான வரிகள் முன்பு 110% வரை இருந்த நிலையில் இப்போது அது 50% ஆகக் குறைக்கப்படும்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications