இந்திய விமானங்களில் மிக பெரிய பாதுகாப்பு குறைபாடு.. டிசிஜிஏ கொடுத்த மிக முக்கிய வார்னிங்
டெல்லி: மத்திய அரசு சமீபத்தில் விமான போக்குவரத்து தொடர்பான ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. அதில் கடந்த ஓராண்டு தணிக்கை செய்யப்பட்ட விமானங்களில் கிட்டத்தட்டச் சரிபாதி விமானங்களில் தொழில்நுட்ப கோளாறு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை பயணிகள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக விமான போக்குவரத்து என்பது மிகவும் பாதுகாப்பான ஒரு பொது போக்குவரத்து முறையாகவே இருக்கிறது. விமானங்கள் எப்போதும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கும். இந்தியாவில் இந்த கண்காணிப்பு பணிகளை டிஜிசிஏ மேற்கொள்கிறது. அது மத்திய அரசுக்குத் தொடர்ச்சியாக ரிப்போர்ட் அனுப்பும்.

50% விமானங்களில் பிரச்சனை
இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நாடாளுமன்றக் குழு அதிருப்தி தெரிவித்துள்ளது. கடந்த ஓராண்டில் தணிக்கை செய்யப்பட்ட விமானங்களில் கிட்டத்தட்ட 50 சதவிகிதம் விமானங்களில் தொடர்ச்சியான தொழில்நுட்பக் கோளாறுகள் காணப்படுவதாக அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கட்டமைப்பில் மிகப் பெரிய மறுசீரமைப்பு தேவை என அந்த குழு வலியுறுத்தியுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து சமீபத்திய அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனவரி 2025 முதல் பிப்ரவரி 2026 வரை தணிக்கை செய்யப்பட்ட 754 விமானங்களில், 377 விமானங்கள் தொடர் தொழில்நுட்பச் சிக்கல்களைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது. இவை பயணிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இண்டிகோ, ஏர் இந்தியா
இண்டிகோ விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களில் அதிக எண்ணிக்கையிலான கோளாறுகள் பதிவாகியுள்ளன. பிப்ரவரி 3 வரை ஆய்வு செய்யப்பட்ட 405 இண்டிகோ விமானங்களில், 148 விமானங்களில் தொடர் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.. அதேபோன்று, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களிலும் கணிசமான குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆய்வு செய்யப்பட்ட 166 ஏர் இந்தியா விமானங்களில் 137 விமானங்களில் தொடர்ச்சியான கோளாறுகள் பதிவாயின. மேலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இயக்கிய 101 விமானங்களில் 54 விமானங்களில் தொடர்ச்சியான தொழில்நுட்பப் பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
அதாவது ஒட்டுமொத்தமாகத் தணிக்கை செய்யப்பட்ட விமானங்களில் சரி பாதி விமானங்களில் தொடர் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோல தொடர்ச்சியான கோளாறுகள் இருப்பது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ஆபரேஷனில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இது விமானப் பயணங்களில் நம்பிக்கையைக் குறைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
டிசிஜிஏ
இந்த அறிக்கையில் 270 பேர் உயிரிழந்த அகமதாபாத் விமான விபத்தைத் தொடர்ந்து ஜூலை 1 முதல் 4 வரை ஏர் இந்தியாவில் நடத்தப்பட்ட விரிவான DGCA தணிக்கையையும் குறிப்பிட்டது. அந்தத் தணிக்கையில் சுமார் 100 பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டன. அதில் உடனடி ரிப்பேர் தேவைப்படும் ஏழு ஹை கிளாஸ் கோளாறுகளும் இருந்துள்ளன.
மேலும், போயிங் 787 மற்றும் 777 விமானிகளின் பயிற்சியில் போதியளவு கவனம் செலுத்தப்படுவதில்லையாம். குறைவான கேபின் ஊழியர்களுடன் இயக்கப்படும் குறைந்தபட்சம் நான்கு சர்வதேச விமானங்கள் கண்டறியப்பட்டுள்ளன. விமானப் பயண நேர வரம்புகள் மீறப்பட்ட சம்பவங்களும் கூட பதிவாகியுள்ளது. மிலான்- டெல்லி விமானம் அனுமதிக்கப்பட்ட பயண நேரத்தை 2 மணி 18 நிமிடங்கள் தாண்டிச் சென்றது. இது சீரியஸான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அபராதம்
பாதுகாப்பு விதிமீறல்களுக்காக ஏர் இந்தியா மட்டும் DGCAவிடம் இருந்து ஒன்பது கேட்டு நோட்டீஸ்களைப் பெற்றது. குறிப்பாக, பிப்ரவரி 2026ல், ஏர் இந்தியாவுக்கு DGCA சுமார் ₹1 கோடி அபராதம் விதித்தது. ஏனெனில், நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் உரியத் தகுதி சான்றிதழ் இல்லாமல் 8 ஏர்பஸ் A320 விமானத்தை இயக்கியதாகச் சொல்லி இந்த அபராதம் விதிக்கப்பட்டது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications