இஸ்ரேலின் பரம எதிரி.. பாலஸ்தீனத்திற்கு மருத்துவமனை கட்டி கொடுக்கும் இந்தியா..மத்திய அரசு தாராளம்
டெல்லி: இஸ்ரேலின் பரம எதிரியாக உள்ள பாலஸ்தீனம் நாட்டிற்கு நம் நாட்டின் சார்பில் புதிய மருத்துவமனை கட்டி கொடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அடுத்த 2 ஆண்டுகளில் அந்த மருத்துவமனை பயன்பாட்டுக்கு வரும் என்று இந்தியாவிற்கான பாலஸ்தீனம் நாட்டின் தூதர் அப்துல்லா ஷாவேஸ் கூறியுள்ளார்.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது. இருநாடுகள் இடையே காலம் காலமாக மோதல் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் கூட பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்பட்டு வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7 ம் தேதி போர் தொடங்கியது.

இந்த போரின்போது இஸ்ரேல் ராணுவம் காசாவிற்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து அதிரடியாக தாக்குதல் நடத்தியது. இதில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டதோடு, லட்சக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஏராளமான வீடுகள் குண்டு வீசி அழிக்கப்பட்டது. தற்போது போர் நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் இருநாடுகள் இடையே தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டு வருகிறது.
பாலஸ்தீனம் பொருளாதாரத்தில் சிறப்பான நாடாக இல்லை. இதனால் காசாவை புனரமைக்க உலக நாடுகளின் உதவியை கோரி உள்ளது. இப்படியான சூழலில் தான் பாலஸ்தீனத்திற்கு புதிய மருத்துவமனை கட்டிக்கொடுக்க இந்தியா தயாராகி உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவுக்கான பாலஸ்தீனத்தின் தூதர் அப்துல்லா ஷாவேஷ் உறுதி செய்துள்ளார்.இதுபற்றி அப்துல்லா ஷாவேஷ் கூறியதாவது:
''இந்தியாவின் உயர் தூதரக அதிகாரி பாலஸ்தீனத்தில் உள்ளது. அவர் ஏற்கனவே எங்களின் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளார். அவர் பாலஸ்தீனத்தின் அதிபரின் உதவியாளரையும் சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின்போது இருநாடுகளின் உறவை மேம்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்.
பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் இந்திய நிதி உதவியுடன் அமைக்கப்பட உள்ள மருத்துவமனைக்கான இறுதி ஆவண பணிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக பாலஸ்தீன அதிபருடைய உதவியாளருடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பணி தொடங்கினால் அடுத்த 2 ஆண்டுகளில் முழுவதுமாக முடிக்கப்படும். அதன்பிறகு நோயாளிகள் உதவி பெறுவார்கள்.
அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய காலத்தில் இருந்தே இந்தியா தொடர்ந்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்தியா தெழிற்கல்வி பயறி்சி யைத்திற்கு ஆதரவு அளித்து வருகிறது. அது விரைவில் தொடங்கப்பட உள்ளது. காசாவில் ஆயிரக்கணகான குழந்தைகள், பெண்கள் உடல் உறுப்புகளை இழந்துள்னர். இவர்களுக்கு செயற்கை கை, கால் வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டுள்ளது'' என்றார்.
தற்போது இந்தியாவின் பாதுகாப்பு (CPV & OIA) தூதர் ஸ்ரீபிரியா ரங்கநாதன் பாலஸ்தீனத்தில் உள்ளார். இந்நிலையில் தான் நம் நாட்டுக்கான பாலஸ்தீன தூதர் அப்துல்லா ஷாவேஷ் இப்படி கூறியுள்ளார். இந்தியா - பாலஸ்தீனம் இடையே மருத்துவமனை கட்டி கொடுப்பது தொடர்பாக கையெழுத்தான பிறகு இதற்கான பணிகள் தொடங்கி அடுத்த 2 ஆண்டுகளில் முடிவுக்கு வரும்.
இந்தியா தற்போது மனிதாபிமான அடிப்படையில் பாலஸ்தீனத்திற்கு மருத்துவமனை கட்டி கொடுக்க முன்வந்துள்ளது. அதேவேளையில் இந்தியாவின் இந்த முடிவுக்கு இஸ்ரேல் எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஏனென்றால் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. அதேவேளையில் இந்தியா - இஸ்ரேல் இடையே நல்ல உறவு உள்ளது. இதனால் இந்தியாவின் இந்த முடிவுக்கு இஸ்ரேல் என்ன செய்யப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications
