Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென்மாநிலங்களில் மாஸ் காட்டும் "இந்தியா" கூட்டணி.. பாஜக நிலை ரொம்பவே மோசம்.. பரபர சர்வே முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் குறித்து இந்தியா டூடே நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இதில் தென்மாநிலங்களில் எந்தக் கட்சி ஆதிக்கம் செலுத்தும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இன்னும் சில மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் குறித்து இந்தியா டூடே தனது மூட் ஆப் தி நேஷன் சர்வே முடிவுகளை இப்போது வெளியிட்டுள்ளது.

 INDIA get more seats thant BJP in South India in Lok Sabha election 2024 says India today survey

கர்நாடகா: அதில் கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. மறுபுறம் காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் வெறும் 4 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. இதர கட்சிகள் அங்கு ஒரு இடத்திலும் வெல்ல வாய்ப்பில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி மொத்தமுள்ள 28இல் 27 தொகுதிகளில் வென்று இருந்தது. காங்கிரஸ் கடந்த முறை ஒரு தொகுதியில் மட்டுமே வென்று இருந்தது. கடந்த லோக்சபா தேர்தல் உடன் ஒப்பிடும் போது காங்கிரஸ் 3 தொகுதிகளில் அதிகம் வென்றாலும் கூட கடந்தாண்டு அங்கு நடந்த சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135இல் காங்கிரஸ் வென்று இருந்தது. அந்தத் தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிட்டால் இந்த சர்வே முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைத் தருவதாகவே இருக்கும்.

தெலுங்கு மாநிலங்கள்: தெலுங்கு பேசும் மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில் மொத்தம் 25 லோக்சபா இடங்கள் நிலையில், அதில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் 17 இடங்களில் வெற்றி பெறும் என்று என்று இந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மறுபுறம், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆந்திராவில் அத்தனை இடங்களும் பிராந்திய கட்சிகளுக்கே செல்லும்.. அங்கே பாஜக அல்லது எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியால் ஒரு இடத்திலும் வெல்லவே முடியாது எனக் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு தெலுங்கு பேசும் மாநிலமான தெலுங்கானாவில் 17 லோக்சபா தொகுதிகளில் 10 இடங்களில் காங்கிரஸ் வெல்லும்.. பாஜக 3 இடங்களிலும், கடந்தாண்டு வரை தெலுங்கானாவில் ஆளும் கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் பிஆர்எஸ் 3 இடங்களில் மட்டுமே வெல்ல வாய்ப்புள்ளதாக அந்த சர்வேயில் கூறப்பட்டுள்ளது. மஜ்லீஸ் கட்சி தனது ஒரு இடத்தை தக்க வைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது மஜ்லீஸ் கட்சித் தலைவர் ஹைதராபாத் எம்பியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா: கேரளாவில் "இந்தியா" கூட்டணிக்கு மித பெரிய ஆதரவு இருப்பதை இந்த சர்வே முடிவுகள் காட்டுகிறது. கேரளாவில் மொத்தம் 20 தொகுதிகள் இருக்கும் நிலையில், அனைத்தும் இந்தியா கூட்டணிக்கே செல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இந்தியா கூட்டணியின் வாக்கு வங்கியும் கடந்த முறையுடன் ஒப்பிடும் போது கணிசமாக அதிகரிக்கும் என்றே கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: தமிழ்நாட்டிலும் ‛இந்தியா' கூட்டணிக்குத்தான் ஆதரவு அதிகம். தமிழ்நாட்டில் மொத்தம் 39 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில், அனைத்திலும் ‛இந்தியா' கூட்டணியே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் திமுக கூட்டணி தேனியை தவிர 38 தொகுதிகளில் வென்று இருந்தது. இந்த முறை தேனியையும் சேர்த்து 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. 2019 தேர்தலில் தேனியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்தரநாத் மட்டும் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களில் மொத்தம் 139 தொகுதிகள் உள்ளன. அதில் அதிகபட்சமாக இந்தியா கூட்டணி 73 இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. அதேநேரம் பாஜகவின் என்டிஏ கூட்டணி 27 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதர இடங்கள் அனைத்தும் பிராந்திய கட்சிகளுக்குச் செல்லும் என்று மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+