ராணுவத்திற்கு 6.81 லட்சம் கோடி ஒதுக்கிய இந்தியா..அமெரிக்கா, சீனா எவ்வளவு ஒதுக்கியிருக்காங்க தெரியுமா?
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8வது முறையாக இன்று 2025- 2026 அம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் ராணுவத்திற்கு என்று ரூ.6.81 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ராணுவ பலத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியா சுமார் 7 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள சூழலில், இந்தியாவின் போட்டி நாடாக அறியப்படும் சீனா மற்றும் அமெரிக்கா தனது பாதுகாப்பிற்கு எவ்வளவு தொகை ஒதுக்கியது என்பது குறித்த விவரங்களையும் பார்க்கலாம்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பு 12 லட்சமாக உயர்த்தப்பட்டது. 10 லட்சம் வரையிலும் வருமான வரி விலக்கு உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் 12 லட்சமாக உயர்தப்பட்டுள்ளது.

1 மணி நேரம் 14 நிமிடங்கள் உரையாற்றிய நிர்மலா சீதாராமன் மேலும் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதேபோல, மின்சார வாகன விற்பனையை ஊக்குவிக்கும் விதமாகவும் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மின்சார வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிக்கான சுங்க வரி முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மின்சார வாகனங்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இந்திய ராணுவத்துக்கு 6.81 லட்சம் கோடி
அமெரிக்க அதிபர் டிரம்ப், டீசல், பெட்ரோலுக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ளார். எனவே எலக்ட்ரிக் வாகன விற்பனை மந்தப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில்தான் இந்தியாவில் மின்சார வாகன சந்தையை செழுமைப்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்பை நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
இது மட்டும் இன்றி முக்கிய துறைகளுக்கு எத்தனை கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற விவரமும் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தியா தனது பாதுகாப்பு துறைக்கு ரூ.6.81 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. அதபோல, வேளாண் துறைக்கு 1.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா எவ்வளவு?
ராணுவ பலத்தில் முன்னணி வகிக்கும் நாடுகளில் ஒன்றாக விளங்கும் இந்தியா சுமார் 7 லட்சம் கோடி ஒதுக்கியுள்ள சூழலில், இந்தியாவின் போட்டி நாடாக அறியப்படும் சீனா மற்றும் அமெரிக்கா தனது பாதுகாப்பிற்கு எவ்வளவு தொகை ஒதுக்கியது என்பது குறித்த விவரங்களையும் பார்க்கலாம்.
* இதன்படி அமெரிக்க தனது ராணுவத்திற்காக ரூ.66 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
* இதேபோல் நம் அண்டை நாடான சீனா ராணுவத்திற்காக ரூ.23 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் துறை ரீதியாக ஒதுக்கப்பட்ட தொகையினை இங்கே பார்க்கலாம்.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு:
* பாதுகாப்பு துறைக்கு 6,81,210 கோடி ரூபாய்
* வேளாண் துறைக்கு 1,71,437 கோடி ரூபாய்
* கல்வித் துறைக்கு 1,28,650 கோடி ரூபாய்
* சுகாதாரத் துறைக்கு 98,311 கோடி ரூபாய்
* உள்துறைக்கு 2,33,211 கோடி ரூபாய்
* ஐடி மற்றும் டெலிகாம் துறைக்கு 95,298 ரூபாய்
* கிராமப்புற வளர்ச்சிக்கு 2,66,817 கோடி ரூபாய்
* நகர்ப்புற வளர்ச்சிக்கு 96,777 கோடி ரூபாய்
* போக்குவரத்துக்கு 5,48,649 கோடி ரூபாய்
* எரிசக்தி துறைக்கு 81,174 கோடி ரூபாய் ஆகும்.












Click it and Unblock the Notifications