அடாவடி செய்யும் பாகிஸ்தான்.. இந்தியா கையில் எடுத்த புதிய ரூட்! கை கொடுக்குமா சீனா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் கடும் விரக்தியில் இருக்கும் பாகிஸ்தான், தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்தது. இதையடுத்து டெல்லி, மும்பையில் இருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் நீண்ட சுற்றுப்பாதையில் செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியா மாற்று யோசனையை கையில் எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலையடுத்து ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் இந்தியா அதிரடி நடவடிக்கையை எடுத்தது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கையை தாங்காமல் 4 நாட்களில் சண்டை நிறுத்தம் செய்ய பாகிஸ்தான் முன்வந்தது.

India Holds Talks With China Over Alternate Air Route Amid Pakistan Airspace Ban - sources

சுற்றி செல்லும் விமானங்கள்

ஆபரேஷனில் பட்ட அடியால் கடும் விரக்தியில் இருக்கும் பாகிஸ்தான், தனது வான்வழியை இந்திய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்தது. அப்போது முதல் இந்திய விமானங்கள் வான்வெழியை பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடைய பாகிஸ்தான் நீட்டித்துக்கொண்டே வருகிறது. இதனால் டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பாகிஸ்தானை தவிர்த்து நீண்ட சுற்றுப்பாதையில் செல்லும் நிலை தற்போது உள்ளது.

சில விமானங்கள் அரபிக்கடல் வழியாக ஓமன் நாட்டின் மஸ்கட் நோக்கி சென்று, பின்னர் மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்கின்றன. இதன் காரணமாக பயண நேரம் கூடுதல் ஆகிறது. அதாவது கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை பயண நேரம் அதிகரித்துள்ளது. இந்த கூடுதல் நேரம் மட்டுமின்றி எரிபொருள் செலவும் அதிகமாகிறது. இதனால் விமான நிறுவனங்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

பயண நேரம் குறையும்

இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியா மாற்று யோசனையை கையில் எடுத்துள்ளது. அதாவது, டெல்லி மற்றும் மும்பையில் இருந்து புறப்படும் விமானங்கள், இந்தியாவின் வடகோடியில் உள்ள லே பகுதி வழியாக சென்று, ஹோட்டன் அருகே சீன வான்வழிக்குள் நுழைந்து, பின்னர் கிர்கிஸ்தான் வழியாக ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கான விமானப் பாதைகளுடன் இணையும் வகையில் விமானத்தை இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த பாதை தற்போதைய சுற்றுப்பாதையைவிட குறுகியதாக இருக்கும் என்பதால், விமானங்களின் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு குறையும் என்று மத்திய அரசு கருதுகிறது. மத்திய ஆசியா மற்றும் வடக்கு ஐரோப்பா செல்லும் விமானங்களுக்கு இந்த வழித்தடம் பயனுள்ளதாக இருக்கும். சீனா வழியாக சென்றால் குறைந்தது 1 மணி நேரம் பயண நேரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை

எனினும், ஹோட்டன் வழித்தடத்தை பயன்படுத்துவது தொடர்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இன்னும் இறுதி ஒப்பந்தமும் ஏற்படவில்லை. இந்த புதிய பாதையை பயன்படுத்த சீனாவின் ஒப்புதல் மட்டுமின்றி, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளிலும் இரு நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும். இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகமும் சீன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்று மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தென்மேற்கு சீனாவின் சின்ஜியாங் பகுதியில் உள்ள ஹோட்டன் வழியாக முன்மொழியப்பட்டுள்ள பாதை, தற்போதைய வழியைவிட குறுகிய தொலைவு கொண்டதாக இருக்கும். நாங்கள் வேறு வழித்தடங்களையும் பரிசீலித்து வருகிறோம். ஹோட்டன் வழித்தடம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நமது வெளியுறவு அமைச்சகமும் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இது எப்படி செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால், மாற்று வழித்தடங்களை நாங்கள் முயற்சித்து வருகிறோம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+