என்ன நடந்தாலும் பார்த்துக்கலாம்.. கனடாவிற்கு எதிராக துணிச்சலாக மோதலில் இறங்கிய இந்தியா.. சபாஷ்!
டெல்லி: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இந்தியாவிற்கு எதிராக பேசியதை இந்தியா லேசில் எடுப்பதாக இல்லை. அதோடு கனடா மேற்கு உலக நாடுகளின் உதவியை நாடி இருப்பதையும் இந்தியா விரும்புவதாக இல்லை.
இதன் காரணமாக அடுத்தடுத்து கனடாவிற்கு இந்தியா தக்க பதிலடியை கொடுத்துக்கொண்டு இருக்கிறது. கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இந்தியாவிற்கும் கடந்த 10 வருடங்களாகவே ஏழாம் பொருத்தம்தான். ஜி 20 மாநாட்டிலேயே அவருக்கும் இந்தியாவிற்கும் நிறைய மனஸ்தாபங்கள் ஏற்பட்டது.

இந்தியா கொடுத்த ஹோட்டல் ரூமை மறுத்தது, இந்தியாவில் அவரின் விமானம் வேலை செய்யாமல் போனது., இந்தியா கொடுத்த விமானத்தை ஏற்க மறுத்தது, ஜி 20 மாநாட்டில் பொதுவான சந்திப்புகளில் ட்ரூடோ ஓரம்கட்டப்பட்டது என்று கடுமையான மோதல்கள் ஏற்பட்டன.
அதோடு இல்லாமல் அதற்கு முன்பே ஒருமுறை இந்தியா வந்த ட்ரூடோவை வரவேற்காமல் இந்தியா அரசு தவிர்த்தது. இந்தியாவில் சாதாரண டூரிஸ்ட் போல பாதுகாப்பு கூட இல்லாமல் ட்ரூடோ ஊர் சுற்றிவிட்டு கடைசியில் சர்ச்சையானதால் மரியாதைக்கு பிரதமர் மோடியுடன் சந்திப்பு நிகழ்த்திய சம்பவங்கள் கூட நடந்தன. காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு கனடா கொடுத்த ஆதரவுதான் இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு காரணம் ஆகும்.
இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாட்டு மோதல் அடுத்த கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கான விசா சேவைகளை இந்தியா நிறுத்தி உள்ளது. கனடா நாட்டை சேர்ந்தவர்களுக்கு இந்தியா வருவதற்கான விசா வழங்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளது. கனடா பிரதமர் ட்ரூடோவின் குற்றச்சாட்டிற்கு இந்தியா இதன் மூலம் சரமாரி பதிலடி கொடுத்துள்ளது.
ஏற்கனவே கனடா தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேவை வெளியேறும்படி இந்தியா உத்தரவிட்டு உள்ளது. கனடா இந்திய தூதரக அதிகாரி வெளியேற்றத்துக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் விதமாக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமர் ட்ரூடோவின் கருத்துக்களைத் தொடர்ந்து, இந்திய தூதரக அதிகாரி பவன் குமார் ராயை கனடா வெளியேற்றியதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். முதல்முறையாக கனடா இந்தியாவின் வெளியுறவுத்துறை தூதரக அதிகாரி கேமரூன் மெக்கேவை இப்படி வெளியேற்றி உள்ளது.
அமெரிக்கா: அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகளின் உதவியை கனடா இதில் நாடி இருந்த நிலையில்; நீ யாரை வேண்டுமானாலும் அழைத்துக்கொள் என்று இந்தியா தைரியமாக கனடாவிற்கு எதிராக ஆக்சன் எடுக்க தொடங்கி உள்ளது. அடங்கி போக இது ஏழை நாடு கிடையாது.. நீங்கள் ஆக்சன் எடுத்தால் நாங்கள் டபுள் ஆக்சன் எடுப்போம் என்பதை இந்தியா மீண்டும் நிரூபித்து உள்ளது.
கண்டிப்பாக கனடா இந்தியாவின் ஆக்சனை எதிர்பார்த்து இருக்காது. இந்தியாவின் மேற்கண்ட நடவடிக்கையை வர்ணிக்க வேண்டும் என்றால் இந்தியா ஒரு ராஜதந்திர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.
காலிஸ்தானி பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்த்து வரும் கனடாவுக்கு எதிராக முழுவதுமாகத் தாக்குதல் நடத்த தயார்.. உங்களை பாகிஸ்தான் போல நேருக்கு நேர் எதிர்க்க தயார் என்று இந்தியா நிரூபித்து உள்ளது. இதுவரை பார்த்திராத இந்தியாவின் இராஜதந்திர நடவடிக்கைகள் இப்போது சர்வதேச அளவில் உலக நாடுகளுக்கு தெரிய தொடங்கி உள்ளது.
கனடாவில் பல கோடி இந்தியர்கள் உள்ள நிலையில்.. அதை பற்றி அச்சம் கொள்ளாமல் துணிச்சலாக இந்தியா களமிறங்கி உள்ளது உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
மோதலுக்கு என்ன காரணம்: கனடா பிரதமர் ட்ரூடோ, வைத்துள்ள புகார்கள் ஒவ்வொன்றாக பின்வருமாறு, அவரது மரணத்திற்கும் இந்திய அரசுக்கும் இடையே "நம்பகமான" தொடர்பை கனடா உளவுத்துறை கண்டறிந்துள்ளதாக ட்ரூடோ கூறி உள்ளார். அண்மையில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் அவர் இந்த விவகாரத்தை எழுப்பினார் என்றும் கூறி உள்ளார்.
இந்த கொலையை இந்தியர்கள் நடத்தி இருக்கலாம். கொலைக்கு பின் அவர்களே முக்கியமாக காரணமாக இருக்கலாம். இந்தியாவின் ஏஜெண்டுகள் மூலம் கொலை நடந்து இருக்கலாம் என்று தனது நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்கள் தன்னிடம் கூறியதாக தெரிவித்துள்ளார். இதை தனது நாட்டின் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் நம்புவதற்கு காரணங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
.கனடா மண்ணில் ஒரு கனடா குடிமகனைக் கொல்வதில் வெளிநாட்டு அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் இருப்பதாக உறுதியானால் அது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும். இது நமது இறையாண்மையில் மேற்கொள்ளப்படும் ஏற்றுக்கொள்ள முடியாத மீறலாகும். சுதந்திரமான, திறந்த மற்றும் ஜனநாயக சமூகங்களின் அடிப்படை விதிகளுக்கு முரணானது. இந்த நடவடிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றுள்ளார். அவரின் இந்த 3 நிமிட பேச்சுதான் மோதலுக்கு காரணம் ஆகி உள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications