ஆபரேஷன் சிந்தூர்.. பதிலடியை தொடங்கிய இந்தியா! அமெரிக்காவின் நிலைப்பாடு இதுதான்!
டெல்லி: கடந்த 22ம் தேதி ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடியை இன்று தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் பற்றி, அமெரிக்காவின் நிலைப்பாடு தற்போது வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் இன்று போர் ஒத்திகை நடக்கும் என்று மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. ஆனால், ஒத்திகை அல்லாமல் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதலை ராணுவம் தொடங்கியிருக்கிறது. மொத்தம் 9 இடங்களில் தாக்குதல் நடைபெறுகிறது. இந்த தாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயரிடப்பட்டிருக்கிறது.

முசாஃபராபாத் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
ராவலகோட் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
கோட்லி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
தந்திரி - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர் அருகே LOC
பாக் ஜம்மு எல்லைப் பகுதியில் உள்ள பயிற்சி முகாம்கள்
லீபா பள்ளத்தாக்கு - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
நீலம் பள்ளத்தாக்கு - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீர்
பாகிஸ்தானின் பஞ்சாப் எல்லைப் பகுதி - சிலகோட் அருகே
பாக் ராணுவ ஆதரவுடன் இயங்கும் ஹபீஸ் சயீத் முகாம்கள் அமைந்துள்ள பகுதி
ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதலின் நோக்கம் தீவிரவாதிகளுக்கு எதிரானது என்பதால் பாகிஸ்தான் உள் கட்டமைப்பு மீது குறி வைக்கப்படவில்லை.
இது குறித்து இந்திய ராணுவும் தனது x பதிவில், "நியாயம் கிடைத்துவிட்டது. ஜெய் ஹிந்த். தாக்க தயாராக இருக்கிறோம். வெற்றிக்காக பயிற்சி பெற்றிருக்கிறோம்" என்று கூறியிருக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்கா தனது கருத்தை வெளியிட்டிருக்கிறது.
ஏஎன்ஐ செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்த அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர், "தாக்கதல் பற்றிய செய்திகளை நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இதைப்பற்றிய எங்கள் கருத்தை இப்போது சொல்ல முடியாது. நிலைமை ஒவ்வொரு நொடியும் மாறிக்கொண்டே இருக்கிறது. எனவே நடந்து வரும் சம்பவங்களை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம்" என்று கூறியுள்ளார்.
அதேபோல டிரம்ப் கூறுகையில், "நாங்கள் ஓவல் அலுவலகத்திற்குள் நுழைந்த போதுதான் இதைப் பற்றிக் கேள்விப்பட்டோம். மோதல் வெடிக்கும் என்பது பலரும் எதிர்பார்த்ததுதான். யோசித்துப் பார்த்தால் பல நூற்றாண்டுகளாக இரு நாடுகளுக்கும் மோதல் இருந்திருக்கிறது. தற்போது தொடங்கியிருக்கும் இந்த மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என நம்புகிறேன்" என் கூறியுள்ளார்.
-
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
இந்தியர்களுக்கு குட்பை.. அமெரிக்காவிற்கே மூட்டையைக் கட்டிய பிரபல நிறுவனம்.. ஐடி ஊழியர்கள் ஷாக் -
"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியக் கப்பல்கள் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்.. டிரம்பின் பகீர் குற்றச்சாட்டும், பின்னணியும்! -
திடீரென மனசு மாறிய டிரம்ப்.. ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி உத்தரவு! காரணம் இதுதான் -
வாழ வைத்த இந்தியா! 22 வயசுல பெங்களூர் வந்த அமெரிக்கர்.. இன்னைக்கு டாப் கோடீஸ்வரர்! எப்படினு பாருங்க -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
அடங்காத போர் வெறி.. அமெரிக்க தாக்குதலில் பறிபோன 3 இந்தியர்களின் உயிர்! ஓமனில் அதிர்ச்சி! -
"ஹார்முஸை நெருங்கினாலே சரமாரி தாக்குதல் நடத்துவோம்.." அச்சுறுத்தும் ஈரான்.. அமைதி ஒப்பந்தம் காலி -
மீண்டும் டிரம்ப் அடித்த பல்டி! "எல்லாம் நல்லா போகுது.. தாக்குதல் கேன்சல்!" உற்று பார்க்கும் ஈரான் -
பேரழிவு வர போகுது.. ஈரானுக்கு நேரடியாக டிரம்ப் தந்த மரண வார்னிங்.. மீண்டும் வெடிக்கும் போர்












Click it and Unblock the Notifications