"வேலைவாய்ப்பே இல்லை..!" இந்தியாவில் 24 மாதங்களில் இல்லாத நிலை.. உற்பத்தி துறையும் பயங்கர சரிவு
டெல்லி: இந்தியாவில் தனியார் துறைகள் எப்படி இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்யும் பிஎம்ஐ குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் உற்பத்தித் துறை கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மெதுவாக வளர்ச்சி அடைந்துள்ளது. அதேபோல புதிய வேலைவாய்ப்பு உருவாக்கமும் 21 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் உற்பத்தி (Manufacturing) மற்றும் சேவை (Services) துறைகளில் உள்ள நிறுவனங்களின் நிலையை அறிய பிஎம்ஐ என்ற கணக்கீடு உதவும். அதாவது ஒரு நிறுவனம் கடந்த மாதத்தை விட இந்த மாதம் அதிக ஆர்டர்களைப் பெற்றுள்ளதா, அதிக ஊழியர்களை வேலைக்கு எடுத்துள்ளதா போன்ற கேள்விகளின் அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.

பிஎம்ஐ டேட்டா
கடந்த டிசம்பர் மாதத்திற்கான இந்தியாவின் பிஎம்ஐ டேட்டா இப்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் உற்பத்தித் துறை டிசம்பர் மாதம் எதிர்பார்த்ததை விட மெதுவாக வளர்ச்சி கண்டது. ஹெச்.எஸ்.பி.சி சர்வதேச உற்பத்தி கொள்முதல் குறியீடு (PMI) 55 ஆகப் பதிவாகியுள்ளது. இது சந்தை மதிப்பீடான 56.5ஐ விடக் குறைந்தது. ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் இதுவே மிகக் குறைந்த வளர்ச்சியாகும்.
பி.எம்.ஐ 50 என்ற நியூட்டிரல் நிலைக்கு மேலேயே இருந்தாலும் கூட சமீபத்திய டேட்டா தொழிற்சாலை நடவடிக்கைகளில் வேகம் குறைவதைக் காட்டுகிறது.. கடந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் பதிவான மிகக் குறைந்த விற்பனை மற்றும் உற்பத்தி வளர்ச்சி இதுவாகும்.
21 மாதங்களில் இல்லாத சரிவு
புதிய ஆர்டர்கள் மற்றும் உற்பத்தி அதிகரித்தாலும், சவாலான சந்தைச் சூழல்கள், திட்டங்களைத் தொடங்குவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் போட்டி காரணமாக அவற்றின் வேகம் குறைந்தது. விற்பனையின் மந்தமான வளர்ச்சியும் ஆப்ரேஷன் முடிவுகளைப் பாதித்தது. இதனால் வேலைவாய்ப்பு உருவாக்கம் 21 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது. அதேநேரம் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விரிவாக்கம் அதிகரிக்கவே செய்துள்ளது..
கடந்த நவம்பரில் செலவின பிரஷர் ஓரளவுக்குக் குறைந்தன. இது உற்பத்தியாளர்களுக்கு நிவாரணங்கள் அளித்துள்ளது.. இதனால் இன்புட் செலவுகள் மற்றும் அவுட்புட் செலவுகள் மெதுவாக உயர்ந்துள்ளது. இன்புட் செலவுகள் கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்த அளவே உயர்ந்துள்ளது. அதேபோல அவுட்புட் செலவுகளும் எட்டு மாதங்களில் இல்லாத நிலையில் உள்ளது. இது உற்பத்தித் துறையில் பணவீக்க பிரஷர் குறைந்துள்ளதையே காட்டுகிறது.
காரணம் என்ன
இது குறித்து ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணர் பிரஞ்சூல் பண்டாரி கூறுகையில், "அமெரிக்காவின் வரிகளால் இந்தியாவில் உற்பத்தித் துறை பாதிக்கப்பட்டுள்ளது. அதைத் தான் இந்த பி.எம்.ஐ காட்டுகிறது. அமெரிக்க வரிகளால் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரி குறைப்பால் அதை ஈடு செய்ய முடியாமல் போகலாம்!" என்றார்.
புதிய ஏற்றுமதி ஆர்டர்களுக்கான பி.எம்.ஐ 13 மாதங்களில் குறைந்த அளவை எட்டியுள்ளது. ஆசியா, ஐரோப்பா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு போன்ற சர்வதேசப் பகுதிகளின் தேவை அதிகமாக இருக்கும் போதிலும், வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது.
PMI என்றால் என்ன
PMI குறியீடு 0 முதல் 100 வரை கணக்கிடப்படும். இதில் 50 என்பது ஒரு முக்கியமான எல்லையாகக் கருதப்படுகிறது.. 50-க்கு மேல் இருந்தால் வளர்ச்சி பாதையில் உள்ளது என்று அர்த்தம். 50-க்கு கீழ் இருந்தால் அது Contraction அல்லது சரிவைச் சந்திக்கிறது என்று அர்த்தம். சரியாக 50 என இருந்தால் கடந்த மாதத்தை விட எந்த மாற்றமும் இல்லை என்று அர்த்தம். இந்தியாவின் டிசம்பர் மாதத்திற்கான பிஎம்ஐ 55ஆக இருந்தாலும் கூட அது சந்தை எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை.












Click it and Unblock the Notifications