திருமாவளவன் 4 மாதம் ஏன் வாய் திறக்கவில்லை.. எஸ்ஐஆர் விவகாரம்.. நயினார் நறுக் கேள்வி
திருச்சி: எஸ்ஐஆர் முறைகேடு விவகாரம் நாட்டில் புயலை கிளப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது, தேர்தல் ஆணையர்களே குற்றம் சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். எஸ்ஐஆர் காரணமாக தான் தவெக வெற்றி பெற்றதாகவும் அவர்களின் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக கூறுகிறது. இதற்கு நயினார் நாகேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.
திருச்சியில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "திருமாவளவன் ஐந்து ஆண்டுகள் யாருடன் இருந்தார் என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். எதற்காக அவர் திடீரென மாறினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். தேர்தலில் வந்தவுடனே சொல்லியிருக்க வேண்டும். ராகுல் காந்தி அவருடைய கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ஜோக்கர். தமிழகத்தில் தவெக வெற்றி பெற்றதற்கு எஸ்ஐஆர் காரணம் என்கிறார்கள்.

வெற்று விளம்பரம்
எஸ்ஐஆரில் முறைகேடு செய்தால் தமிழகத்தில் பாஜக தானே ஜெயித்திருக்க வேண்டும். தேர்தலில் எப்படி தவெக வெற்றி பெற்றது. இந்தியாவில் வாக்கு எண்ணும் மையத்தை கொண்டு வந்தது யார். காங்கிரஸ் தானே கொண்டு வந்தது. அதன் பிறகு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று அவர்கள் எத்தனை முறை ஆட்சிக்கு வந்தார்கள். கேரளா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது யார். அங்கு பாஜகவா வெற்றி பெற்றது. காங்கிரஸ் தானே முதலமைச்சராக உள்ளனர். கர்நாடகா, தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி தானே நடைபெறுகிறது.
எஸ்ஐஆரில் குளறுபடி செய்தால் காங்கிரஸ தானே ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் முடிந்து 5 மாதங்களாகிறது. இப்போது திடீரென தவெக வெற்றிக்கு எஸ்ஐஆர் காரணம் என்கிறார்கள். இதன்மூலம் தவறான விளம்பரத்தை தேடுகிறார்கள். திட்டமிட்டு தவறான தகவலை பரப்புகிறார்கள். சமூகவலைதளங்களில் தவறான தகவலை பரப்பி அரசியல் செய்கிறார்கள். தேவையில்லாமல் காமெடி செய்கிறார்கள்.
தவெக மீது அதிருப்தி
படத்தில் நடிப்பது போல தான் பிரகாஷ் ராஜ் நிஜத்திலும் உள்ளார். தமிழ்நாடு உற்பத்தி துறையில் முதன்மை மாநிலமாக இருந்தது. ஆனால் இப்போது நம் ஜிஎஸ்டி வருவாய் குறைந்து வருகிறது. அதேநேரத்தில் குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் ஜிஎஸ்டி அதிகரித்து வருகிறது. மறுபக்கம் தமிழகத்தில் கடன் தான் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தேர்தல் குறித்து நான் ஜோசியம் சொல்ல முடியாது. மக்கள் மத்தியில் தவெகவுக்கு அதிருப்தி உள்ளது.
அதனால் தான் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. சமூகவலைதளங்களில் வருவதை வைத்து நான் சத்தியபாமாவை குறை சொல்ல மாட்டேன். எம்எல்ஏ ஆன 10 நாட்களில் அவர் ஏன் கட்சி மாறினார் என்பதை மட்டும் கேள்வியாக கேட்பேன். மக்கள் என்னென்னவோ நினைத்து ஓட்டு போட்டார்கள். அது நடைபெறவில்லை. தவெக 4 மாதங்களில் 300 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. அரசு செலவில் முதல்வர் விஜய் லண்டனுக்கு டூர் செல்கிறார். மக்களை ஏமாற்றுகிறார்" என்றார்.



Click it and Unblock the Notifications
