முதலீட்டில் ரூட் போட்ட திமுக! தவெகவை சுற்றி எழும் கேள்வி.. நாக்பூர் போகிறதா தமிழகத்தின் பெரிய சான்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் ஒரு புதிய தொழிற்சாலை வந்தால், அது அந்த நிறுவனத்துக்கு மட்டும் கிடைக்கும் லாபம் கிடையாது. அந்தத் தொழிற்சாலையை சுற்றி நிறைய சின்ன சின்ன நிறுவனங்கள் உருவாகும்; ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். அப்படி ஒரு பெரிய வாய்ப்பு தமிழகத்துக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.. ஆனால், அந்தச் சான்ஸ் இப்போது நாக்பூர் பக்கம் திரும்பிவிட்டதே ஏன்? என்ன நடந்தது?

ராணுவத்துக்கான போக்குவரத்து விமானங்களைத் தயாரிக்கும் C-390 மில்லினியம் திட்டம்தான் இப்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது. இந்த விமானங்களை இந்தியாவில் தயாரிக்கப் பிரேசிலின் Embraer நிறுவனமும், இந்தியாவின் Mahindra குரூப்பும் இணைந்து திட்டமிட்டு வருகின்றன.

Investment

பெரிய விமானங்கள் தயாரிப்பு

இந்தத் திட்டத்தின் கீழ் விமானத்தின் பாகங்களை ஒன்றாக இணைத்து, முழு விமானமாக தயாரிக்கும் ஆலைக்கு (Final Assembly Line) மகாராஷ்டிராவின் நாக்பூர் பரிசீலனையில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தமிழக அரசியலிலும் இப்போது பேசுபொருளாகியுள்ளது.

முதலில் C-390 என்றால் என்ன என்று பார்ப்போம். இது சாதாரண பயணிகள் விமானம் கிடையாது. ராணுவத்துக்கு தேவையான வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்லவும், பேரிடர் நேரங்களில் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தக்கூடிய பெரிய போக்குவரத்து விமானம்.

இந்த விமானத்தை இந்தியாவில் தயாரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய விமானப்படைக்கு நடுத்தர ரக போக்குவரத்து விமானங்கள் தேவைப்படும் திட்டத்தில் C-390 போட்டியிடுகிறது. இதனால், விமானத்தின் இறுதி அசெம்ப்ளி ஆலை எங்கு அமையும் என்பது முக்கியமான கேள்வியாகியுள்ளது.

C-390 மில்லினியம் திட்டம்

அப்படியென்றால், தமிழகத்துக்கும் இந்த திட்டத்துக்கும் என்ன தொடர்பு? திமுக ஆட்சிக் காலத்தில் C-390 திட்டத்தை தமிழகத்துக்கு கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் உள்ள சூலூர், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ஆகிய இடங்கள் பரிசீலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், தற்போதுள்ள அரசு முறையான பின்தொடர்தல் (Follow-up) செய்யாமலும், ஆட்டோபைலட் (Autopilot) மோடில் செயல்பட்டதாலும்தான் இந்த வாய்ப்பு கைவிட்டுப் போய்விட்டதாக டி.ஆர்.பி. ராஜா வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நாக்பூரில் நிலம்

நாக்பூரில் நிலம் உள்ளிட்ட அரசு உதவிகள் வேகமாக கிடைத்ததால், அந்த இடம் முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. அதே நேரத்தில், C-390 விமானத்தை இந்திய விமானப்படை இறுதியாக தேர்வு செய்துவிட்டதாகவோ, நாக்பூரில் ஆலை அமைப்பது உறுதியாகிவிட்டதாகவோ இப்போதைக்கு சொல்ல முடியாது.

அப்படியிருக்கும்போது, தமிழகத்தில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் என்ன ஆனது என்ற கேள்வியும் எழுகிறது.. ஏனென்றால், ஒரு பெரிய விமான தொழிற்சாலை வந்தால், அதில் நேரடியாக வேலை கிடைப்பவர்கள் மட்டுமல்லாமல், உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், போக்குவரத்து, பராமரிப்பு, பொறியியல், சாப்ட்வேர், பயிற்சி உள்ளிட்ட பல துறைகளுக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும்.
அதனால்தான் இப்படிப்பட்ட பெரிய தொழில் திட்டங்களை தமிழகத்துக்குள் கொண்டுவரவும், அரசு தொடர்ந்து தீவிரமாகப் பின்தொடர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தொழில் முதலீடு

ஒரு மாநிலத்துக்குத் தொழில் முதலீடு என்பது வெறும் ஒரு தொழிற்சாலை கட்டப்படுவது மட்டுமே கிடையாது. அதைச் சுற்றி வேலைவாய்ப்பும், சிறு நிறுவனங்களும், தொழில்நுட்ப வளர்ச்சியும் சேர்ந்து உருவாகும். அதனால், C-390 திட்டம் இறுதியில் எங்கே அமைகிறது என்பதைவிட, இப்படிப்பட்ட பெரிய தொழில் வாய்ப்புகளைத் தமிழகத்துக்குள் தக்கவைக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறது என்பதுதான் இப்போது முக்கியமான கேள்வியாக உருமாறியுள்ளது...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+