வழக்கமான பாணியை விடுங்க.. விஜய்க்கு திருமாவளவன் சொன்ன அட்வைஸ்! முக்கியமான டிமாண்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து செவிலியர்கள் போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செவிலியர் விஷயத்தில் அரசு வழக்கமான பாணியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நேற்று சென்னையில் செவிலியர்கள் போராட்டம் நடத்தினர். காரணம் அவர்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்பதுதான். கடந்த 2021ல் தமிழகம் முழுவதும் 4,750 செவிலியர்கள் ஸ்கீம் ஒர்கர்களாக.. அதாவது இடைநிலை பணியாளர்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் அரசு ஊழியர்களும் கிடையாது, தனியார் ஊழியர்களும் கிடையாது. அரசு துறையில் வேலை பார்த்து, மத்திய மற்றும் மாநில அரசிடம் சம்பளம் பெறும் கணக்கில் வராத ஊழியர்கள்.

Nurses Protest

விஜய்யின் உத்தரவாதம்

கொரோனா காலத்தில் உயிரை கொடுத்து வேலை பார்த்திருக்கிறார்கள். இப்போதும் தமிழ்நாடு முழுவதும் கிராமங்களில் வேலை செய்து வருகிறார்கள். தங்களை பணி நிரந்தரம் செய்து அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு என்ன சம்பளமோ அதையே எங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் டிமாண்ட். திமுக ஆட்சியில் போராட்டத்தில் இவர்கள் ஈடுபட்டபோது விஜய் ஆதரவு கொடுத்திருந்தார். நான் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகள் பணி நிறைந்தவர்களை நிரந்தரம் செய்வேன் என்று கூறியிருந்தார்.

சம வேலைக்கு சம ஊதியம்

தற்போது விஜய்தான் முதலமைச்சர். ஆனால், இன்னமும் பணி நிரந்தரம் செய்யவில்லை என்று செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், அரசு இன்னும் எந்த பதிலையும் சொல்லவில்லை.

இப்படி இருக்கையில் இந்த விஷயத்தில் திருமாவளவன் அரசுக்கு டிமாண்ட் வைத்திருக்கிறார். "அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்கள், தங்களுக்குப் பணி நிரந்தரம் வேண்டும் என்றும், 'சம வேலைக்கு சம ஊதியம்' வழங்க வேண்டும் என்றும் கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு முன்வர வேண்டும்

அண்மையில் போராடிய செவிலியர்கள் சங்கத்தின் முன்னணி நிர்வாகிகளோடு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அரசு கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதியளித்த நிலையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சியை வரவேற்கிறோம்.

தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் செவிலியர்கள், 'சம வேலைக்கு சம ஊதியம்' வேண்டுமென்பது மிகவும் நியாயமான கோரிக்கையாகும். இதனை தமிழ்நாடு அரசு காலம் தாழ்த்தாமல் விரைந்து பரிசீலனை செய்து அதனை நிறைவேற்ற முன்வர வேண்டும்.

அரசு மறுத்து வருகிறது

சுகாதாரத்துறையில் பணியாற்றும் செவிலியர்கள் மட்டுமல்லாது அரசின் பல்வேறு துறைளிலும் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் செவிலியர்கள் பணிநிரந்தர கோரிக்கை முன் வைக்கின்ற போதெல்லாம், அரசு தரப்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி அதனை மறுதலித்து வருகிறது.

விஜய்க்கு நெருக்கடி

வழக்கமான இத்தகைய போக்கினை கைவிட்டு மக்களின் நலம் பேணும் மகத்தான பணிகளைச் செய்யும் தற்காலிக -ஒப்பந்த செவிலியர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செயவதற்கான 'கொள்கை முடிவை' உடனடியாக வரையறுத்திட வேண்டுமென தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது" என்று அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் இதையே வலியுறுத்தியிருந்தன. விஜய் முதலமைச்சராக ஆதரவு கொடுத்த கட்சிகளே செவிலியர் விஷயத்தில் அரசு நியாயமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருப்பது விஜய்க்கு நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+