371 இடங்களை பிடிக்கும் பாஜக கூட்டணி.. இந்தியா கூட்டணிக்கு எத்தனை? இந்தியா நியூஸ் கருத்துக்கணிப்பு
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 371 சீட்கள் கிடைக்கும் என்றும், இந்தியா கூட்டணிக்கு 125 இடங்கள் கிடைக்கும் என்று இந்தியா நியூஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
நாடு முழுக்க 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக 2024 ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக பொதுத் தேர்தல்கள் நடைபெறுகின்றன. வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 4 ஜூன் 2024 அன்று அறிவிக்கப்படும். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு முடிந்தது.

மத்தியில் ஆளும் பாஜக ஹாட்ரிக் முறையாக ஆட்சியை பிடிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கூறி வருகிறார்கள். அதேவேளையில், பாஜகவை இந்த முறை வெல்ல விட மாட்டோம் என்ற வியூகத்துடன் பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள், பாஜகவை வீழ்த்துவோம் என்று கூறி வருகிறது.
ஜூன் 04 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவுகளை நாடே எதிர்பார்த்துக்கொண்டு உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்தியா நியூஸ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில், பாஜக கூட்டணிக்கு 371 இடங்கள் கிடைக்கும் என்று கணித்துள்ளது.
இதேபோல் இந்தியா கூட்டணிக்கு 125 இடங்களும் பிற கட்சிகள் 47 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக இந்தியா நியூஸ் கணித்துள்ளது.
இந்தியா நியூஸ் கருத்துக்கணிப்பு:
பாஜக கூட்டணி - 371
இந்தியா கூட்டணி - 125
பிற கட்சிகள் -47.












Click it and Unblock the Notifications