நாடு சந்திக்கும் 22வது பொது வேலை நிறுத்தம்! 17 அம்ச கோரிக்கைகள் என்னென்ன?
டெல்லி: இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் தொடர்ந்து பல பொது வேலை நிறுத்தங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் இன்று 22வது பொது வேலை நிறுத்தத்தை நாடு சந்திக்கிறது. 17 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து இந்த பந்த் நடக்கிறது.
அகில இந்திய பொது வேலை நிறுத்த கோரிக்கைகள் பின்வருமாறு,

1.புதிய நான்கு தொழிலாளர் சட்டத்தொகுப்புகளை திரும்ப பெற வேண்டும்.
2.அமைப்புசாரா தொழிலாளர், ஒப்பந்த தொழிலாளர், திட்டம் சார்ந்த தொழிலாளர் உட்பட அனைவருக்கும் மாதமொன்றுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000/- நிர்ணயம் செய்ய வேண்டும்.
3.ஒப்பந்த, தினக்கூலி, வெளிச்சந்தை முறை, பயிற்சியாளர் போன்ற பெயர்களில் நடக்கும் சுரண்டலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
4.அமைப்புசாரா தொழிலாளர் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9,000 மற்றும் சமூக பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வீடு சார் தொழிலாளர்கள், தாள் சேகரிக்கும் தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், திட்டம் சார் தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், கடைகள் மற்றும் நிறுவன தொழிலாளர்கள், சுமைப்பணி தொழிலாளர்கள், உப்பள தொழிலாளர்கள், பீடி தொழிலாளர்கள், கார், ஆட்டோ டாக்ஸி தொழிலாளர்கள், மீனவ சமூகத்தினர் உள்ளிட்டோரை பதிவு செய்து ஓய்வூதியம் உட்பட சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும்.
5.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்க வேண்டும்.
6.போனஸ், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை போன்றவைகளுக்கு உள்ள உச்சவரம்பை நீக்க வேண்டும். பணிக்கொடை தொகையை அதிகப்படுத்த வேண்டும்.
7.விண்ணப்பித்த 45 நாட்களுக்குள்ளாக தொழிற்சங்கத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க வேண்டும்.
8.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்திட வேண்டும்.
8. பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு மீதான மத்திய கலால் வரியை கணிசமாக குறைத்திட வேண்டும். உணவு பாதுகாப்பை உத்திரவாதப்படுத்தி, பொது விநியோக திட்டத்தை பரவலாக்க வேண்டும்.
9.பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள், தனியார் மயத்தை நிறுத்திடு, தேசிய பணமாக்கல் திட்டத்தை (NMP) ரத்து செய்ய வேண்டும். தற்போது உள்ள சுரங்க சட்டத்தை திருத்த வேண்டும். நிலக்கரி சுரங்கங்கள் உட்பட சுரங்கங்களின் 50% லாபத்தை பழங்குடியினர் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட உள்ளூர் சமூக மேம்பாட்டிற்கு ஒதுக்கிட வேண்டும்.
10.விவசாய பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை C2 + 50 என்ற முறையில் நிர்ணயம் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டும்.
11.மின்சாரத் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். மின்சாரத்தை தனியார்மயமாக்குவதை கைவிட வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் முறையை கைவிட வேண்டும்.
12.வேலை பெறுவதை அடிப்படை உரிமையாக்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலை திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
13.கல்வி, மருத்துவம், தண்ணீர் அனைவருக்கும் கிடைப்பதை உரிமையாக்க வேண்டும். புதிய கல்விக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். அனைவருக்கும் வீட்டு வசதியை உறுதி செய்திட வேண்டும்.
14.வன உரிமைச்சட்டத்தை கடுமையாக அமுலாக்க வேண்டும். 2023 - வனப் பாதுகாப்புச் சட்ட திருத்தத்தை திரும்பப் பெற்றிட வேண்டும்.
15.கட்டட தொழிலாளிக்கும் இஎஸ்ஐ திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தை வலிமைப்படுத்த வேண்டும்.
16.பெரும் செல்வந்தர்களுக்கு வரி விதித்திட வேண்டும். கார்ப்பரேட் வரியை அதிகப்படுத்தி, சொத்து வரி மற்றும் பரம்பரை வரியை மீண்டும் கொண்டு வர வேண்டும்.
17.அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். கருத்துரிமை, மதச் சுதந்திரம், பன்முக கலாச்சாரம், கூட்டாட்சி முறை மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.
என 17 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இன்று நாடு முழுவதும் பந்த் நடக்கிறது. இதில் சுமார் 25 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.
-
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது?












Click it and Unblock the Notifications