இந்தியா முழுவதும் விறுவிறுவென அதிகரிக்கும் ஓமிக்ரான் 653 பேர் பாதிப்பு - 186 டிஸ்சார்ஜ்
ஓமிக்ரான் தொற்றினால் நாடு முழுவதும் 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களுக்கு ஓமிக்ரான் பரவியுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் ஓமிக்ரான் பரவல் வீரியமாக பரவத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் தொற்றினால் 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதே நேரத்தில் 186 பேர் ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான நாடுகளுக்கு ஓமிக்ரான் பரவியுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஓமிக்ரான் வைரஸ் பிடியில் சிக்கியுள்ளன. பல்லாயிரக்கணக்கானோர் ஓமிக்ரான் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். பல பகுதிகளில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா அமல்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் 7 நாட்கள் கட்டாய தனிமையில் வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா தொடங்கி 21 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவியுள்ளது.
ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய பிரதேசம், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடாகாவிலும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்றிரவு இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே நாடு முழுவதும் 653 பேர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக டெல்லியில் 165 பேரும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 167 பேரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து 186 பேர் குணமடைந்து மீண்டுள்ளனர்.
மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் 6,358 புதிய கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 653 பேர் ஓமிக்ரான் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6,450 பேர் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. 75,456 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் குணமடைந்தவர்கள் விகிதம் தற்போது 98.4 சதவிகிதமாக உள்ளது.
கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 145 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வரும் ஜனவரி 3ஆம் தேதி முதல் சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜனவரி 10 முதல் மூத்த குடிமக்களுக்கும் முன்களப்பணியாளர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications