உயர்ந்தது "பவர்" பெட்ரோல் விலை.. தொழில்துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.21 எகிறியது

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கிழக்கு மோதல் தொடரும் சூழலில், இதனால் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இதற்கிடையே பவர் பெட்ரோல் விலையை உயர்த்துவதாக HPCL அறிவித்துள்ளது. அதன்படி பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக HPCL நிறுவனம் அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதல் 4வது வாரத்தை நெருங்குகிறது. இந்த போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் சப்ளை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல போர் பதற்றம் காரணமாகக் கச்சா எண்ணெய் விலையும் தொடர்ந்து தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

India Petrol price hike

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏற்கனவே 100 டாலரை கடந்துவிட்டது. இதற்கிடையே பவர் பெட்ரோல் விலையை உயர்த்துவதாக HPCL அறிவித்துள்ளது. அதன்படி பவர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படுவதாக HPCL நிறுவனம் அறிவித்துள்ளது.

எண்ணெய் நிறுவனமான ஹெச்பிசிஎல், தனது பவர் பெட்ரோல் வகையின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. எனினும், அன்றாடப் பயன்பாட்டில் உள்ள சாதாரண வகை பெட்ரோலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.

அதேபோல தொழில்துறை எரிபொருள் விலை லிட்டருக்கு ரூ.21.92 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.87.67ஆக இருந்த தொழில்துறை எரிபொருள் விலை ரூ.109.56ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. தொழில்துறை எரிபொருள் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+