டீசல் – விமான எரிபொருள் மீதான இறக்குமதி வரி திடீர் அதிகரிப்பு.. இந்தியாவில் விலை உயருமா?
டெல்லி: வெளிநாடுகளுக்கான டீசல் மற்றும் விமான எரிபொருட்கள் மீதான ஏற்றுமதியை வரியை அதிரடியாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ள நிலையில் நம் நாட்டில் டீசல், விமான எரிபொருட்கள் மீதான ஏதாவது மாற்றம் இருக்குமா? இல்லையா? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் நள்ளிரவில் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: ''நம் நாட்டில் இருந்து ஏற்றுமதியாகும் டீசல் மீதான வரி லிட்டருக்கு ரூ.11.50ல் இருந்து ரூ.14 ஆக அதிகரிக்கப்படுகிறது. அதேபோல் விமான எரிபொருட்கள் மீதான ஏற்றுமதி வரி ரூ.11 ல் இருந்து ரூ.12.50 ஆக உயர்த்தப்படுகிறது. பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரியில் எந்த மாற்றமும் இல்லை'' என கூறப்பட்டுள்ளது.

உலகளவில் தற்போது எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐரோப்பியா உள்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் ஐரோப்பியாவிற்கு நம் நாட்டில் இருந்து டீசல் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் தான் டீசல் மீதான ஏற்றுமதி வரியை உயர்த்தி உள்ளது. இதன்மூலம் நம் நாட்டுக்கு கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது.
இந்த ஏற்றுமதி வரி உயர்வால் நம் நாட்டில் டீசல், விமான எரிபொருட்கள் மீதான விலையில் எந்த மாற்றமும் இருக்காது. அதேவேளையில் நம் நாட்டிடம் இருந்து டீசல், விமான எரிபொருட்களை வாங்கும் நாடுகளில் விலையேற்றம் என்பது இருக்கும்.


Click it and Unblock the Notifications
