கடந்த 24 மணி நேரத்தில்.. 2.43 லட்சம் பேருக்கு இந்தியாவில் கொரோனா.. தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 243,777 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் கொஞ்சம் குறைந்துள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் இந்தியாவில் தினமும் 4 லட்சத்திற்கும் அதிகமான கேஸ்கள் பதிவானது.

தற்போது தினசரி கேஸ்கள் 2.4 லட்சத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது. வரும் நாட்களில் இது மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா

இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 243,777 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 26,528,846 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 3788 பேர் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

பலி

பலி

299,296 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர் . இதுவரை கொரோனாவில் இருந்து 23,418,523 பேர் இந்தியாவில் குணமடைந்து உள்ளனர். 2,811,027 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிராவில் 55,53,225 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 26133 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 682 பேர் 24 மணி நேரத்தில் பலியான நிலையில் 87,300 பேர் மொத்தமாக பலியாகி உள்ளனர். 3,52,247 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவிலேயே கடந்த 5 நாட்களாக தமிழகத்தில்தான் தினசரி கேஸ்கள் அதிகமாக வருகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில்தான் அதிக கேஸ்கள் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் 18,06,861 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 35873 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 448 பேர் 24 மணி நேரத்தில் பலியான நிலையில் 87,300 பேர் மொத்தமாக பலியாகி உள்ளனர். 20,046 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கேரளா

கேரளா

கேரளாவில் 23,22,147 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 28514 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 176 பேர் 24 மணி நேரத்தில் பலியான நிலையில் 7,171 பேர் மொத்தமாக பலியாகி உள்ளனர். 2,89,280 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கர்நாடகா

கர்நாடகா

கர்நாடகாவில் 23,98,925 பேர் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 31183 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு 451 பேர் 24 மணி நேரத்தில் பலியான நிலையில் 24,658 பேர் மொத்தமாக பலியாகி உள்ளனர். 4,83,204 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+