இந்தியாவில் திடீரென கொரோனா பாதிப்பு விஸ்வரூபம்- 24 மணிநேரத்தில் 9,629 பேருக்கு தொற்று
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9,629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 29 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த வாரத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 10,000-த்தை தாண்டியதாக பதிவாகி இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. 3 நாட்களாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000-த்தை தாண்டியதாக மட்டுமே இருந்தது.

இந்தியாவில் நேற்று முன்தினம் காலையுடனான 24 மணி நேரத்தில் 9,011 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர். மேலும் 7,178 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தினசரி பாதிப்பு விகிதம் 9.16% வாராந்திர பாதிப்பு விகிதம் 5.41% இதுவரை மொத்தம் 92.54 கோடி சோதனைகள் நடத்தப்பட்டன. நேற்று காலை வரை 78,342 சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தியாவில் நேற்று முன்தினம் ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 65,683 பேர்.
நேற்று 3-வது நாளாக இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. நேற்று காலையுடனான 24 மணிநேரத்தில் 6,660 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதியானது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகிற அதாவது ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கையும் நேற்று குறைந்தது. மொத்த ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை நேற்று 63,380.
மேலும் நேற்று மொத்தம் 24 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
தற்போது திடீரென ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 9629 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications