இந்தியாவில் மேலும் 12,781 பேருக்கு கொரோனா; 18 பேர் உயிரிழப்பு! மகாராஷ்டிராவில் கிடுகிடு அதிகரிப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த சில நாட்களாக ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 12,000-த்தை தாண்டியதாக பதிவாகி உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 12,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 12,899 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டிருந்தது. நேற்று இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 72,474 ஆக இருந்தது. அதாவது கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 0.17 சதவிகிதமாக இருந்தது.
மேலும் நேற்று காலையுடனான 24 மணி நேரத்தில் 8,518 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்திருந்தனர். நாட்டில் கொரோனா தினசரி பாதிப்பு விகிதம் 2.89 சதவீதம் ஆகவும் வாராந்திர பாதிப்பு விகிதம் 2.50 சதவீதம் ஆகவும் இருந்தது.

ஒருநாள் பாதிப்பு
இந்நிலையில் இன்று காலையுடனான 24 மணிநேரத்தில் மொத்தம் 12,781 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள விவரங்கள்: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,781 புதிய நோயாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 2,96,050 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 85.81 கோடி (85,81,37,713). வாராந்திரத் தொற்று 2.62 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 4.32 சதவீதமாக பதிவாகியுள்ளது.

ஆக்டிவ் கேஸ்கள் அதிகரிப்பு
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை (76,700) மிகக் குறைவாக உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.18 சதவீதமாக உள்ளனர். இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.61 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 8,537 பேர். குணமடைந்துள்ளனர். பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,27,07,900.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 196.18 கோடிக்கும் அதிகமான (1,96,18,66,707) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,53,18,438 அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 3.57 கோடிக்கும் அதிகமான (3,57,40,210) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

மாநில நிலவரம்
18-59 வயது உடையவர்களுக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தும் பணி 10 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை, 193.53 கோடிக்கும் மேற்பட்ட (1,93,53,58,865) தடுப்பூசி டோஸ்கள் மத்திய அரசு மூலம் இலவசமாகவும் மற்றும் மாநிலங்களின் நேரடி கொள்முதல் மூலமும் வழங்கப்பட்டுள்ளன.மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் 12.75 கோடிக்கும் மேற்பட்ட (12,75,03,205) தடுப்பூசி டோஸ்கள் இன்னமும் இருப்பில் உள்ளன.
-
இரு துருவத்தில் பயணிக்கும் இந்தியா - அமெரிக்கா.. முதலீட்டாளர்களே இதையெல்லாம் நோட் பண்ணுங்கப்பா!! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா!












Click it and Unblock the Notifications