'ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பேர்'.. வழிகாட்டிய அமெரிக்கா! முடித்து காட்டியது இந்தியா
டெல்லி: பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத நிலைகள் மீது இந்தியா நடத்திய தாக்குதல் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த தாக்குதல் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா காட்டிய வழியில் நடந்திருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்
ஒரு நாட்டில் உள்ள குறிப்பிட்ட இலக்கை மட்டும் தாக்கி அழிக்கும் முறையை அமெரிக்கா நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தானில் இதுபோன்று நடத்தப்பட்ட தாக்குதல் உலகில் உள்ள பல நாட்டு ராணுவத்திற்கு புதிய ஐடியாவை கொடுத்திருந்தது.

ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பேர்
அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்தவர் ஒசாமா பின்லேடன். இவரை போட்டு தள்ள தீட்டப்பட்ட பிளான்தான் 'ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பேர்'. இது எளிதான காரியம் கிடையாது. பாகிஸ்தானின் உட்பகுதியில் உள்ள அபோதாபாத்தில் பங்களா வீட்டில் பின்லேடன் தங்கியிருந்தார். அங்கு நேரடியாக சென்று அவரை கைது செய்து கொண்டு வருவது நடக்காத காரியம். அது அவசியமும் இல்லை. எனவே அங்கு வைத்தே பின்லேடனை தூக்குவது என்று திட்டமிடப்பட்டது.
இதற்காக தீட்டப்பட்ட திட்டம்தான் 'ஆபரேஷன் நெப்டியூன் ஸ்பேர்'. இதில் அமெரிக்க ராணுவ வீரர்கள் நேரடியாக ஈடுபடுத்தப்பட்டனர். பின்லேடன் தங்கியிருக்கும் வீடு, அவர் எப்போது வெளியே வருவார்? எந்த அறையில் தங்கியிருப்பார்? என்கிற விவரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சேகரிக்கப்பட்டு பின்னர் ஹெலிகாப்டர் மூலம் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நேரம் 40 நிமிடங்கள். இதில் பின்லேடன் கொல்லப்பட்டிருக்கிறார். ஏறத்தாழ இதேபோன்ற திட்டத்தைதான் இந்தியா செயல்படுத்தியிருக்கிறது.
இந்தியா நடத்திய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டிருக்கிறது. இதில் தாக்குதல் நேரம் வெறும் 25 நிமிடங்கள். அதாவது, அதிகாலை 1.05 மணிக்கு தொடங்கி 1.30 மணிக்குள் தாக்குதல் நிறைவடைந்திருக்கிறது. தாக்குதலில் ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. எதிர் தாக்குதலை தடுக்க பீரங்கி குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. இந்த தாக்குதலுக்கு முன்னதாக, தீவிரவாத குழுவினர் எங்கு இருக்கின்றனர்? அவர்களுடைய பதுங்குமிடம் எது? பயிற்சி இடம் எது? என்கிற தகவல்கள் உளவுத்துறை மூலமாக திரட்டப்பட்டிருக்கிறது.
இதனை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலில் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டுமல்லாது, அவர்களுக்கு சொந்தமான இடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டிருக்கின்றன. இறுதியாக இந்த தாக்குதலை இந்தியாதான் நடத்தியது என்று வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்கா பின்லேடனை கொன்ற பின்னர் இப்படி சொல்லவில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆபரேஷன் சிந்தூரை லெப்டினன்ட் கர்னல் சோபியா குரேஷி மற்றும் வியோமிகா சிங் என இரண்டு பெண் அதிகாரிகள் வழிநடத்தி சென்றிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications